என்னைப் பற்றி

My photo
நான் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படிக்கிறேன். விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவன்.இங்கு உள்ளவற்றை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள் .

Tuesday, December 15, 2009

திருந்துவாரா தளபதி?ஏங்கும் ரசிகர்கள்.


எத்தனையோ படம் நடிச்சாச்சு. 50 யும் நெருங்கியாச்சு.ஒரு காலத்துல இவருதான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு முடிவு பண்ணி ஒரு சேனல் அவார்டே கொடுத்திச்சி.ஆனா இப்ப இவரோட நிலைமையே தலைகீழா போச்சு.தன்னை சினிமா உலகில தக்க வச்சிகிரதுக்கே இவரு பாடு படனும் போலிருக்கு.அவருதாங்க இளைய தளபதி(?) விஜய்.
எவ்ளோ புது நடிகர்லாம் வராங்க.நிறைய கெட்அப் போடுறாங்க.ஆனா இத்தனை வருஷமா தன கெட் அப் ப ஒரு முறை கூட மாதி நடிக்க தெரியாத நடிகரா இவர் ஒருத்தர் மட்டும் தான் இருக்கார்.சரி அதுவாச்சும் பரவாயில்லை.வித்தியாசமான கதையில வாச்சும் நடிக்கலாம்ல.அதையும் பண்றதில்ல.எல்லாமே aஒரு லைன் ஆக்சன் ,காமெடி,லவ் pஸ்டோரி தான்.இவரு படம்னாலே இப்படித் தான் இருக்கும் என ரசிகர்கள் முடிவு செய்து விட்டார்கள்.

அதோட விளைவு தான் கடைசியா நடிச்ச 3 படங்களும் வந்த இடம் தெரியாமல் போனதற்கு.இதற்கு மேலாவது தோல்வியின் காரணத்தை பற்றி யோசிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.ஆனா அதுக்கும் வச்சாரு பாருங்க ஆப்பு.வந்துது வேட்டைக்காரன் படத்தோட டிரெய்லர் .வேட்டை ஆரம்பிச்சிடிச்சி டோய்...சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன். சாக்கடை முன்னாடி இல்ல...அப்டின்னு பஞ்ச் பேசி ரசிகர்களை டின்ச் பண்ணியிருக்கிறார்.

அது மட்டுமல்ல இவரது படங்களில் சில சீரியசான காமெடிசண்டைகளும் இருக்கும்.மைலாப்பூரில் இருந்து டிரிப்ளிகேனுக்கு வானத்திலேயே பறப்பார்.சாக்கடையிலிருந்து வெளிவந்து பறப்பார்.வாயாலே வண்டி ஓட்டுவார். மண்ணில் புதைத்த பிறகு எழுந்து வந்து வில்லனை வதம் செய்வார்.இது வேட்டைகாரனிலும் தொடர்கிறது.
அதை விடுங்கள் ..ஒரு பெரிய நடிகர் மேடையில் "அழகென்ற சொல்லுக்கு அனோஷ்கா "என்று பாட்டு பாடுகிறார்.என்ன கொடும சார் இது என்று தலையில் கை வைக்கின்றனர் ரசிகர்கள்.இத்தனை கொடுமைக்கும் நடுவில் அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டம் வேறு.இருக்கிற ரசிகர்களையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுரைகள் குவிகின்றனவாம்.

இதற்கிடையில் அடுத்த படமான சுராவின் இயக்குனர் சொல்கிறார்,இதவும் பக்கா மசாலா படம் என்று.திருந்தவே மாட்டாரா இவரு.?முன்பெல்லாம் விஜய் படமென்றால் மாஸ் எனபது போய் வேட்டைக்காரன் சன் பிக் சர்ஸ் இன் கையை நம்பி இருக்கிறது.அவர்கள் தான் டிவி பார்க்க விடாமல் டிரேய்லர் போட்டு சாகடித்து விடுவார்களே.
எனவே இந்த படம் சற்றே ஓட வாய்ப்பு உள்ளது என்ற பேச்சு அடிபட்டுள்ளது.ஆனாலும் சன் பிக் சர்ஸ் இன் கடந்த வரலாறுகளை பார்த்தால் அனைத்து படங்களும் ஹிட் என அவர்கள் சொல்லிக் கொண்டாலும் ஒரு படம் மட்டுமே (அயன் ) பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகி உள்ளது என கூறப்படுகிறது.இனிமேலாச்சும் அவர் ஓவரா வசனம் பேசாமல் ஒழுங்கா நடிச்சா தான் ஓடும்.அடுத்த படத்திலாவது செய்வாரா என சோகத்துடன் காத்து கிடக்கின்றனர் ரசிகர்கள்.

Monday, October 12, 2009

மகிந்தவின் அழைப்பின் பேரிலேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா பயணம்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பி வைத்த அழைப்பின் பேரிலேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தற்போது சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ரி.ஆர்.பாலு தலைமையிலான 10 பேர் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று 5 நாள் பயணமாக தற்போது சிறிலங்காவில் தங்கி உள்ளது. இன்று அக்குழுவினர் யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளை ஆராய்வர்.

இக்குழுவினர் இந்திய மத்திய அரசினால் தமிழ் மக்களின் அவலநிலை அறிந்து வருவதற்காக அனுப்பப்பட்டவர்கள் என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி நேற்று சனிக்கிழமை மறுத்திருந்ததார்.

அதேசமயம், இந்திய நாடாளுமன்ற குழுவினர் அரச தலைவர் மகிந்தவின் அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா வந்துள்ளனர் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதத்தில் தமிழ்நாடு சென்றிருந்த ஆறுமுகம் தொண்டமான் சிறிலங்கா அரச தலைவரின் அழைப்பை முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் வழங்கி இருந்தார்.

"முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பை அனுப்பியதன் மூலம் இந்த விடயத்திற்கான தொடக்கத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவே இட்டிருந்தார்" என தொண்டமான் கூறினார்.

Saturday, October 10, 2009

3வது அணிக்கு மக்கள் தயார்! கட்சிகள் தயாரா?

இது பழ.நெடுமாறன் அவர்களின் தென் செய்தி இதழில் எழுதப்பட்டது .

தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தி.மு.க விற்கோ அ.தி.மு.க விற்கோ வலிமை இல்லை. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மையை அளிக்காததன் மூலம் ஆட்சியாளர்களின் தங்கு தடையற்ற அதிகாரத்திற்கு வாக்காளர்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் அளவுக்கு மீறிய வலிமை அளிக்கப்பட்டதின் மூலம் ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரப் பாதையில் சென்றதைக் கண்ட மக்கள் இந்தமுறை அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

"இடிப்பாரை இல்லா ஏமரா மன்னனைப்' போல கடந்த காலத்தில் இரு கழகங்களுமே நடந்துக் கொண்டதை மக்கள் பொறுத்துக் கொள்ளவில்லை என்பது வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒரு கட்சி ஆட்சியைத்தான் ஆதரிப்பார்கள். கூட்டணி ஆட்சியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் என்று கூறியவர்களின் வாதம் தவிடுபொடியாகி விட்டது.

தேர்தல் என்பது நாட்டில் சனநாயகத்தை நிலைநிறுத்த உதவும் ஒரு நிகழ்ச்சி என்பதையும் வாக்காளர்களே எல்லாவற்றிற்கும் மேலானவர்கள் என்பதையும் இரு கழகங்களும் மறந்தே போயின. சனநாயகத்தில் வெற்றியும் தோல்வியும் இயற்கையானது. எதுவாக இருந்தாலும் அதை இன்முகத்துடன் ஏற்பவன்தான் உண்மையாக சனநிாயகவாதியாக இருக்க முடியும். அத்தகைய மனநிலைதான் நாட்டின் சனநாயகத்தைப் பாதுகாக்கும் என்ற உண்மையையும் இரு கழகங்களும் உணரவில்லை.

ஒன்றை ஒன்று அழிக்கும் வெறியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இத்தேர்தலில் எப்படியாவது எதைச் செய்தாவது வெற்றிப் பெற்றேயாக வேண்டும் என்ற போக்கு இரு தரப்பிலும் வெளிப்பட்டது. தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இரு கழகங்களுமே வாக்குறுதிகளை வாரி வழங்கியதோடு நின்றுவிடவில்லை. தேர்தலுக்கு முதல்நாள் வரை புதிய புதிய வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

அரிசி விலையைக் குறைக்க வேண்டுமென்றோ, இலவச தொலைக்காட்சி, கணிணி தர வேண்டுமென்றோ, விவசாயக் கடன்களை அடியோடு இரத்து செய்ய வேண்டுமென்றோ பொதுமக்கள் ஒரு போதும் கேட்கவில்லை என்பது முக்கியமானதாகும்.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 30 முதல் 35 சதவிகித வாக்காளர்களை கவரவே இத்தகைய வாக்குறுதிகளை இரு கழகங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு அறிவித்தன.

உலகமயமாதலின் அடுத்தக் கட்டத்தில் இலவசங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ்நாட்டில் இலவசங்களை அள்ளித் தரும் வாக்குறுதிகள் வழங்கப்படுவது முரண் நிறைந்த வேடிக்கையாகும்.

பொருளாதார தொலைநோக்கு இல்லாமல் எப்படியாவது வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டதைக் கண்டு விவரம் அறிந்தவர்கள் நகைப்பார்கள். இரு கழகங்களும் வாரி வழங்கியிருக்கும் இலவசத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டுமானால் ஆண்டு தோறும் 7000 முதல் 8000 கோடி வரை செலவாகும் என ¬ன்னாள் அய்.ஏ.எஸ் அதிகாரியான பி. எஸ். இராகவன் கூறியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்ய மேலும் சுமார் 7000 கோடி தேவைப்படும்.

வேளாண்மையில் தமிழகம் தன்னிறைவுப் பெற்று பசுமைப் புரட்சியின் அடுத்தக் கட்டத்தில் அடியெடுத்து வைக்கவிருக்கும் வேளையில் அரிசி விலைக் குறைப்போ இலவச அரிசி வழங்குவதோ கொஞ்ச¬ம் பொருத்தமோ அவசியமோ அற்றது என்பதை இரு தரப்பினரும் எண்ணிப் பார்க்கவில்லை.

உழைக்க தயாராக இருக்கும் எண்ணற்ற இளைஞர்களின் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகளைப் பெருக்கி நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் அதிகமாக்குவதற்கு பதில் உட்கார்ந்த இடத்தில் இலவசங்களைப் பெறும் சோம்பேறிகளாக அவர்களை ஆக்குவது தொலைநோக்கற்ற செயலாகும்.

மானியங்களாலும் இலவசங்களாலும் இன்றியமையாத மக்கள் நலத்திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். அத்திட்டங்களுக்குரிய நிதி குறைந்து அதை ஈடு செய்ய கடுமையான வரிகளை விதிக்க நேரிடும் என்ற அடிப்படையான பொருளாதார தத்துவத்தைக் கூட இரு கழகங்களும் எண்ணிப் பார்க்கவில்லை.

பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த போது பி.யூ.சி. வரை இலவசக் கல்வி அளிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஏழைக் குழந்தைகளைப் பள்ளிக்கு ஈர்க்க இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்த பிஞ்சு உள்ளங்களில் ஏற்ற தாழ்வு உணர்வு உருவாகாமல் இருக்க இலவச சீருடைத் தந்தார். அவர் காலத்திற்கு முன் தமிழ்நாட்டில் கல்வி அறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. பதவியை விட்டு அவர் இறங்கும் போது 37 சதவிகிதமாக உயர்ந்திருந்தது.

வெள்ளையர் ஆட்சி நிடத்திய 200 ஆண்டு காலத்தில் தமிழர்கள் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு பல மடங்கு மேலான வளர்ச்சியை 8 ஆண்டு காலத்தில் காமராசர் கொண்டு வந்தார் என முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு கூறி நெகிழ்ந்தார். காமராசர் காலத்தில் கல்வியை இலவசமாக அளித்ததின் விளைவாகத் தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் 15 பல்கலைக் கழகங்கள் உருவாகி வளர்ந்திருக்கின்றன. இலட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் படித்து பட்டம் பெற்று உயர்நிலை அடைந்திருக்கிறார்கள். அதனால்தான் தமிழர்களின் கல்விக் கண்களைத் திறந்தவர் காமராசர் என பெரியார் மனம் நிறைந்து பாராட்டினார்.

தமிழகத்தில் கல்வி இன்றைக்கு வாணிபமாகி விட்டது. பணம் படைத்தோர் வீட்டு பிள்ளைகளுக்கே கல்வி என்ற நிலை உருவாகி விட்டது. இதற்கு யார் பொறுப்பு?

தமிழகப் பள்ளிகளில் இன்று 90,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை. கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இந்த குறைகளைப் போக்காமல் மாணவர்களுக்கு கணிணி இலவசமாகத் தருகிறேன் என்பது எவ்வளவு பேதைமை?

தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் நகர்ப்புற ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளிலும் வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் சுகாதார குடிநீர் கிடைக்கவில்லை. அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத ஊர்கள் ஏராளம் ஏராளம். பேருந்துகள் செல்லாத கிராமங்கள் கணக்கற்றவை. ஏழை எளிய மக்களின் இந்த இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்யாமல் வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதால் என்ன பயன்?

தமிழ்நாடு சமூக கண்காணிப்பகம் என்னும் அமைப்பு அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை அலசி ஆராய்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்களின் அடிப்படை கோரிக்கைகள் என அது குறிப்பிட்டுள்ளவை குறித்து இரு கழகங்களின் தேர்தல் அறிக்கைகளில் எவ்விதக் கருத்தும் சொல்லப்படவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். அவற்றில் சிலவற்றை கீழேத் தருகிறோம்.

* கிராமப் பொது நிலங்கள் மற்றும் பொது வளங்கள் உபயோகத்தினை பொறுத்த மட்டில் முடிவெடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிராம ஊராட்சிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனைப் பாதிக்கும் வகையில் நடந்துக் கொண்டால் அவர்களைப் பதவியிலிருந்து திரும்பப் பெறும் அதிகாரம் மக்களுக்குத் தரப்படவேண்டும்.

* நமது கனிம வள¬ம், கடல் வளமும், வன வளமும் கொள்ளை போவதை உடனேத் தடுக்க வேண்டும்.

* உலகமயமாக்கல் மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையின்படி கல்வி, சுகாதாரம், தண்ணீர் மற்றும் சேவைத் துறைகளுக்கான நிதி ஆதாரங்களை படிப்படியாகக் குறைத்து அவற்றை தனியார் கைகளில் ஒப்படைக்கும் மாநில அரசின் போக்கு மாற்றப்பட வேண்டும்.

* மகளிர் சுய உதவிக் குழுக்கள் அரசியல் கட்சிகளுக்கு வாக்கு வங்கிகளாக மாற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

* 18 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய, தரமான கல்விக் கொடுக்கப்பட வேண்டும்.

மேலே கண்ட எதையுமே இரு கழகங்களும் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இது போன்ற 40க்கும் மேற்பட்ட முக்கியமான மக்கள் பிரச்னைகள் குறித்து இரு கழகங்களும் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லையென அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பொதுவாக மக்கள் பிரச்னைகளை குறித்து விவாதங்கள் நடத்த இரு கழகங்களும் தயாராக இல்லை. மாறாக போட்டிப் போட்டுக் கொண்டு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக வாக்காளர்கள் வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் செய்ததில் இரு கழகங்களும் வெற்றி பெற்று விட்டன என்றுதான் கூற வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் மும்முரத்தில் ஈடுபட்டிருந்த நேரம் பார்த்து போர் நிறுத்த உடன்பாட்டை மீறி ஈழத்தமிழர்கள் மீது சிங்கள முப்படைகளும் குண்டு மழைப் பொழிந்த போது இரு கழகங்களும் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.

ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை விட வாக்கு வேட்டையாடுவது முக்கியமானது என அவர்கள் கருதி அதிலேயே முனைப்பாக இருந்தார்கள்.

சனநாயகரீதியாக நடக்க வேண்டிய இந்த தேர்தலை பணநாயகத் தேர்தலாக மாற்றிய பெருமை இரு கழகங்களையுமே சாரும். சட்டமன்ற தொகுதி ஒன்றிற்கு கோடி ரூபாய்க்கு மேல் வாரி இறைத்து சனநிாயகத்தைக் கேலிக் கூத்தாக்கிவிட்டார்கள். இனிமேல் பணம் படைத்த வேட்பாளர்களும் பணம் குவித்து வைத்திருக்கும் கட்சிகளும் மட்டுமே தேர்தலில் ஈடுபட ¬டியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். எந்தக் கட்சியைச் சார்ந்த ஏழைத் தொண்டனும் இனி தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி கனவு கூட காண முடியாது.

சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்புவதற்கும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், முத்தமிழின் சுவையை மக்களுக்கு ஊட்டுவதற்கும் கலையைக் கருவியாய் பயன்படுத்த பெரியாரும், அண்ணாவும் முன் வந்தனர். ஆனால் அரியணையேறுவதற்குக் கலைஞர்களைப் பயன்படுத்த தி.மு.க.வில் செய்யப்பட்ட முயற்சி பிற்காலத்தில் கழகத்திற்கே வேட்டு வைத்தது. அரியணை ஏற உதவியவர்கள் தாங்களே அரியணையில் அமர்ந்தால் என்ன? என நினைத்தனர். விளைவு, தமிழக அரசியல் தடம் புரண்டது. ஆனாலும் பாடம் கற்க வேண்டியவர்கள் இன்னமும் கற்கவில்லை.

இந்தத் தேர்தலிலும் அரியணை ஏற கொள்கை, கோட்பாடுகளை விட நடிக நடிகையரையே இரு கழகங்களும் நம்பின. போட்டிப் போட்டுக்கொண்டு அவர்களை வலை வீசிப் பிடித்துக் களத்தில் இறக்கின. ஆனாலும் மக்கள் இம்முறை ஏமாறவில்லை.

முடிவு காட்டுவது என்ன?

பெரும் போட்டிக்கிடையே நடந்த இந்த தேர்தலின் முடிவு ஒரு உண்மையை தெளிவாக உணர்த்தியிருக்கிறது. இரண்டு அணிகளும் பெற்ற வாக்குகளுக்கிடையே உள்ள வேறுபாடு 4.79 சதவிகிதம் மட்டுமே. அதிக வேறுபாடு இல்லை.

2004-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இரு அணிகளுக்கும் இடையே இருந்த வேறுபாடு 23 சதவிகிதமாக இருந்தது. ஆனால் 2 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அணியின் வாக்குகளில் 17.21 சதவிகிதம் சரிந்திருக்கிறது என்பது தெளிவான உண்மையாகும்.

அதனால் வெற்றி பெற்ற அணி முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்பதும் தோற்ற அணி பெரிய தோல்வியை அடைந்து விடவில்லை என்பதும் வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில்லாமல் இரு கழகங்களுமே தாங்கள் பெற்றிருக்கிற வெற்றிகளை நிச்சயமாகப் பெற்றிருக்க முடியாது. ஒரு காலக்கட்டத்தில் தங்கள் தயவில்தான் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன என இரு கழகங்களுமே இறுமாப்புடன் கூறி வந்த காலம் மலையேறிவிட்டது.

இரு கழகங்களின் கூட்டணிகளில் உள்ள கட்சிகள் மறு சிந்தனை செய்ய வேண்டிய வேளை வந்துவிட்டது.

நடிகர் விசயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் இத்தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டது. விசயகாந்த் மட்டும் வெற்றிப் பெற்றிருக்கிறார். அக்கட்சியின் பிற வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்து உள்ளனர். ஆனால் அக்கட்சியின் வேட்பாளர்கள் நூறுக்கு மேற்பட்ட தொகுதிகளில் 10,000 வாக்குகளில் இருந்து 40,000-க்கு மேற்பட்ட வாக்குகள் வரை பெற்றிருப்பது எண்ணிப் பார்க்கத் தக்கதாகும்.

கொள்கை, கோட்பாடு, வேலைத் திட்டம் போன்ற எதிலும் தெளிவில்லாமல் அமைப்பு ரீதியான வலிமை இல்லாமலும் நடிகர் என்ற பிம்பம் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கிய இக்கட்சிக்கு 8.32 சதவிகித வாக்குகள் கிடைத்திருப்பது எப்படி? ஏன்?

நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க-வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க கண்டு ஐந்தாண்டு களுக்குள்ளாக அக்கட்சியை ஆட்சி பீடத்தில் அமரச் செய்தார். ஆனால் அதற்கு பின்னணி என்ன? தி.மு.கழகத்தோடு ஒட்டி வளர்ந்தார். இரசிகர் மன்றங்களை உருவாக்கி தனக்கென்று ஒரு வலிமையை சேர்த்துக் கொண்டார். கொடை வள்ளல் என்று பெயர் பெற்றார் போன்ற காரணங்களை சிலர் அடுக்குகிறார்கள். அவையெல்லாம் சாதாரணமானவை. எம்.ஜி.ஆர் வெற்றிக்கு வழிகோலியது இவை அல்ல.

1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியைத் தொடங்கினார். 1977-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். அவர் தி.மு.கழகத்திலிருந்து விலகுவதற்கு முன்பாகவே அறிஞர் அண்ணா காலமாகிவிட்டார். 72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகியத் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள்.

தமிழக அரசியலில் ஏற்பட்ட சூனிய நிலையை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்றத் தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் விடை எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக அமைந்தது. அவர் மறையும் வரை அது நீடித்தது.

எம்.ஜி.ஆருக்கு இருந்த இந்த வாய்ப்பு விசயகாந்துக்கோ அல்லது வேறு எந்த நடிகருக்கோ வரப் போவது இல்லை. அப்படியானால் விசயகாந்த் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் எப்படி கிடைத்தன என்ற கேள்வி எழுகிறது.

விசயகாந்த் கட்சியின் வேட்பாளர்களில் மிகப் பெரும்பாலோர் அவர்கள் போட்டியிட்ட தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர்கள் அல்லர். அவர்களுக்கு வேலை செய்ய அமைப்புகளும் தொண்டர்களும் கிடையாது. பல தொகுதிகளில் வாக்குச் சாவடி முகவர்கள் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் தி.மு.க.விற்கோ அ.தி.மு.க.விற்கோ வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் வாக்கினை முரசு சின்னத்திற்கு அளித்தனர். இதுதான் உண்மை.

இந்த உண்மையிலிருந்து இரு கழகங்களும் அல்லாத கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டியவற்றை புரிந்து கொள்ள வேண்டும். அதை செய்ய அவர்கள் தவறுவார்களானால் தமிழ்நாட்டு அரசியல் இன்னும் பல ஆண்டுகளுக்கு சீரழிந்து போகும்.

இரு கழகங்களுமே கூட்டணி பலம் ஒன்றின் மூலம் மட்டுமே ஆட்சியை மாறி மாறி பிடித்து வந்தன. பதிவான மொத்த வாக்குகளில் சராசரி மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை மட்டுமே பெற்று இக்கழகங்கள் ஆட்சியில் அமர்ந்தன என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் மக்கள் அளித்த தீர்ப்பை எண்ணிப் பார்த்தால் மக்கள் இரு கழகங்களையுமே விரும்பவில்லை என்பதும் மூன்றாவது ஒன்றை விரும்புகிறார்கள் என்பதும் தெளிவாகப் புரியும்.

இரு கழகங்களுடனும் கூட்டு சேராமல் தேர்தலைத் தனியாகவே சந்திக்கும் துணிவு நடிகர் விசயகாந்துக்கு இருந்தது. அதனால்தான் இரு கழகங்களையும் விரும்பாத மக்களின் வாக்குகள் அவருக்குக் கிடைத்தன. மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவார் களானால் மக்கள் பேராதரவு தருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ்நாட்டு அரசியலில் இரு கழகங்களையும் சாராத கட்சிகள் எண்ணித் துணிந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பிரச்னைகளை முன் வைத்து ஒன்றிணைந்து போராடுவார்களானால் தமிழகத்திற்கு விடிவு பிறக்கும். ஆதரவு தர மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆதரவைப் பெற கட்சிகள் தயாராக வேண்டும்!

Thursday, October 8, 2009

ஈழப் போர் பொய்களும் உண்மைகளும்

இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும். அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார்.
முற்குறிப்பு:

ஏராளமான கதைகள் உலவுகின்றன.

என்னைப் பற்றியும் ஒரு கதை உலாவியது: 'மெளனம் சம்மதம்' என்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு தகவல்களையும் ஒரு வேண்டுகோளையும் விடுத்து விட்டு முடிக்கின்றேன்.

தகவல் ஒன்று: சிவபெருமானே இறங்கி வந்தாலும் அவருடன் கருத்து வேறுபடுவதற்கும், எனது கருத்தை வெளியில் சொல்வதற்கும் எனக்கிருக்கும் உரிமையை அவர் நிராகரிக்க மாட்டார்.

தகவல் இரண்டு: தமிழ்ச்செல்வன் அண்ணனே எழுந்து வந்தாலும் அவர் மீது எனக்கிருந்த மரியாதையையோ அல்லது எனது ஒழுக்கத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையையோ மறுக்க மாட்டார்; அதனை என்னையும் அவரையும் நன்கறிந்தவர்களும் மறுக்க மாட்டார்கள்.

வேண்டுகோள்: தமிழர்களாகிய நாம் உன்னதமான பண்பையும், மேன்மையான பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டு 2,500 ஆண்டு காலமாகக் கூர்ப்படைந்து முதிர்ச்சி பெற்ற ஒரு மக்கள் இனம். ஒரு மனிதனின் கருத்தோடு உடன்படவில்லை என்பதற்காக - அவனின் ஒழுக்கத்தைக் களங்கப்படுத்தி Character Assassination செய்யும் விதமாக - கடுகளவேனும் உண்மையற்ற விடயங்களைத் தயவு செய்து எழுதாதீர்கள், தயவுசெய்து மின்னஞ்சல் செய்யாதீர்கள், தயவு செய்து எங்கும் வெளியிடாதீர்கள்.

நன்றி.

* * * * *

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2

ஏராளமான கதைகள் இப்போது உலவுகின்றன.

உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்ப வேண்டிய துயரச் சூழலுக்குள் தமிழ்த் தேசிய இனம் சிக்குண்டுள்ளது.

தேசியத் தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்ற உண்மையை வதந்தி எனவும், செல்வராஜா பத்மநாதன் அவர்கள் யாரிடமோ விலை போய் விட்டார் என்ற வதந்தியை உண்மை எனவும் நம்ப வேண்டிய சூழலுக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

முன்பு அறிக்கை விட்டபோது அறிவழகன் உண்மையானவர் என்றும் பின்பு அறிக்கை விட்டபோது அறிவழகன் பொய்யானவர் என்றும் நம்ப வேண்டிய நிலைக்கு மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பல கதைகளின் உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்தும் பொறுப்பைக் காலத்தின் கைகளில் விட்டுவிடுகின்றேன்; நிகழ்காலத் தேவை கருதி - அதில் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றவன் என்ற வகையில் - ஒரு கதைக்கு மட்டும் விளக்கம் சொல்லி விட்டு முடிக்கின்றேன்.

தலைவர் அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்று சொல்லி "யாரோ" அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கதை உலாவுகின்றது.

வன்னிப் போரை நிறுத்தி, மக்களைக் காத்து, தலைவரையும் தலைமைப்பீடத்தையும் பாதுகாப்பான ஒர் இடத்திற்கு நகர்த்துவதற்காக -

கடந்த வருடம் (2008) செப்ரெம்பர் முதல் எடுக்கப்பட்டு வந்த கடுமையான - இடையறாத - முயற்சிகளிலும் -

விடுதலைப் புலிகளின் வன்னித் தலைமை, சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 9 மாத காலமாக இது தொடர்பாக இடம்பெற்று வந்த தொடர்பாடல்களிலும் -

நடேசன் அண்ணனின் அங்கீகாரத்துடன் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றவன் என்ற முறையில் ஒரு விடயத்தைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்:

பரப்பப்படுகின்ற எந்தக் கதையிலும் எந்தவிதமான உண்மையும் இல்லை.

ஆயுதங்களை மெளனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது.

நோர்வே அரசு, குறிப்பாக திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் தனிப்பட்ட அக்கறையுடன் இதில் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருந்தார். அவரும் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் தலைமைக்கு யாருடைய உதவியும் தேவைப்பட்டிருக்கவில்லை.

எவரையும் நம்பியோ, அல்லது "கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றுவோம்" என்ற எவருடைய வாக்குறுதியையும் நம்பியோ தலைவர் அவர்கள் அங்கிருந்து போராடவில்லை.

2009, மே 14, வியாழக்கிழமை வரை - தொடர்ந்து போராடுவதில் தமக்கு இருந்த உறுதிப்பாட்டையே விடுதலைப் புலிகளின் தலைமை வெளிப்படுத்தியபடி இருந்தது.

ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது; ஆனால், அது வெளியிலிருந்து யாராலும் கொடுக்கப்பட்டதல்ல.

மே 14, வியாழன் அன்று, தம்மால் இன்னும் தொடர்ந்து சில காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்று புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்; அதே விடயத்தை, அதே நாள், அவர் பத்மநாதன் அண்ணனுக்கும் சொல்லியுள்ளார்.

போரை இடைநிறுத்தி, அயுதங்களை "மெளனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.

அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்.

இதே தகவல் - பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்.

வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்.

ஆனால் - விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறு முன்வந்த போது, எல்லாம் காலம் கடந்தவையாக ஆகிவிட்டிருந்தன.

இவை தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக நடந்த தொடர்பாடல்கள், உரையாடல்கள், பரிமாற்றங்கள், ஆதாரங்கள் என்பனவற்றை - தேவையேற்படும் போது - வரலாற்றைச் சீர்படுத்துவதற்காக - சம்மந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள் என்று நம்புகின்றேன்.

கே.பி.-யருக்குத் துதிபாடுவது எனது நோக்கமல்ல: அவரை நான் பார்த்ததும் கிடையாது; அவருடன் தொடர்பு கொள்ளும் படி நடேசன் அண்ணை சொல்லும் வரை அவருடன் நான் பேசியதும் கிடையாது.

கே.பி. அண்ணரைப் பற்றி பல கதைகள் உலாவவிடப்பட்டுள்ளன. "துரோகி", "விலை போனவர்", "ஏமாற்றியவர்" என்று ஒரு மாத காலத்திற்குள் அவருக்குச் சூட்டப்பட்டுவிட்ட பட்டங்கள் பல.

கடந்த 30 வருடங்களாக அவர் என்ன செய்தார் என்பது - அவருக்கும், தலைவருக்கும், இடையிலிருந்த தொலைத் தொடர்பு கருவிக்கும், அதனை இயக்கிய போராளிகளுக்கும் மட்டுமே தெரிந்த விடயங்கள். மற்றவர்களாகிய நாங்கள் கற்பனைகளை வளர்க்காமல் சும்மா இருப்பதே நல்லது.

அவருடைய பாதுகாப்பும் அந்தப் பணிகளின் பாதுகாப்பும் கருதி - ஆயுதக் கொள்வனவு மற்றும் நிதிக் கையாளுகை விடயங்களிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கே.பி. அண்ணர் அவர்கள் - அவர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக - பாலா அண்ணை விட்டுச் சென்ற இடத்தை ஓரளவுக்காவது நிரப்புவதற்காக தலைவர் அவர்களால் இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இப்போது இலங்கைத் தீவில் - விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தில் அநேகமாக எல்லோருமே வீரச்சாவு அடைந்து விட்டார்கள்; மிகுதிச் சில பேர் சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்.

இத்தகைய சூழலில் - என்னைப் பொறுத்தவரையில் - கே.பி. அண்ணர் அவர்களை நம்புவதற்கும், அவரை நம்பும்படி சக தமிழர்களுக்குச் சொல்வதற்கும், தன் கீழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடையாக அவரை ஏற்றுக்கொள்ளுவதற்கும் நான்கு காரணிகள் அடிப்படையாக உள்ளன:

1. தனது தொடர்பு அறுந்து போனால் கே.பி. அண்ணருடன் தொடர்பு கொள்ளும்படி தான் நடேசன் அண்ணை என்னிடம் சொல்லியிருந்தார்.

2. வன்னியிலிருந்து வந்த ஆகக் கடைசி ஒலிப்பதிவில் - கே.பி. அண்ணர் ஊடாகவே எல்லாம் செய்யப்படுகின்றது என்பதை சூசை அண்ணன் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

3. கடந்த 30 வருடங்களாக - விட்டுப் பிரியாமல் தலைவரோடு இருந்து பேராட்டத்தை வளர்த்த - தற்போது மிஞ்சியிருக்கும் இருவரில் ஒருவர் அவர்; அடுத்தது, அடேல் அன்ரி.

4. வன்னியிலிருந்த எவராலும், வெளியிலிருக்கும் எவருக்கும் வழங்கப்பட்ட முதலும் கடைசியுமான அறிவுறுத்தலில் கே.பி. அண்ணரின் வழிநடத்தலில் இயங்குமாறே சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆக, இப்போதிருக்கும் சூழலில் அந்த மனிதர் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு - கட்டுக்கோப்புடனும், ஒருங்கிணைவுடனும், கூட்டுச்சிந்தனையுடனும் உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் எல்லோருக்கும் நல்லது.
யை கூர்ந்து நான் சொல்கின்ற கருத்துக்களைத் திறந்த மனதோடு - ஒரு விஞ்ஞான சிந்தனையோடு கிரகியுங்கள்.

ஒரு கடமை உணர்வோடு உண்மையைச் சொல்ல முனையும் ஒருவனோடு கோவிக்காதீர்கள்; அவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதாதீர்கள்; விலகி இருப்போரைச் சேர்த்துச் செல்ல வேண்டிய காலத்தில் இருக்கும் போது, சேர்ந்து இருப்போரை விலக்கி விடாதீர்கள்.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போர் இப்போது ஒரு நிறுத்தத்திற்கு வந்து விட்டது.

ஒர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அகச் சூழல் தாயகத்தில் இப்போது இல்லை.

அம்பாறைக் காட்டில் ராம் அண்ணை அடுக்கெடுக்கிறார் என்பதெல்லாம் வெறும் கதை; வன்னிக் காட்டில் ஆயிரக்கணக்கில் புலிகள் பதுங்கியிருக்கின்றார்கள் என்று சொல்லப்படுவது சுத்த வதந்தி; நாளை அவர்கள் வெளியில் வந்து, கெரில்லாப் போர் நடாத்தி, சாதனைகள் புரிவார்கள் என்று காத்திருப்பது வெறும் கற்பனை.

தயவு செய்து கெரில்லாப் போர் முறையை (Guerrilla Warfare) விளங்கிக்கொள்ளுங்கள்:

பொதுமக்கள் வாழாத இடத்தில் - அது காட்டுப் புறமோ அல்லது நாட்டுப் புறமோ - ஒரு கெரில்லாப் போராளி வாழ்வதென்பது சாத்தியமே இல்லாத விடயம்.

கெரில்லாப் போர் முறைக்கு அடிப்படையானது மக்கள்:

மக்கள் தமது ஊர்களில் வசிக்க வேண்டும்; வசித்தாலும், போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருந்தாலும், ஒரு கெரில்லாப் போராளிக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும்.

தமிழீழத்தின் தற்போதைய களப் புறநிலையில் இவை எதுவுமே இல்லை:

ஒரு கெரில்லாப் போராட்டத்தை நடத்தும் ஏது நிலையோ அல்லது அதன் விளைவுகளைத் தாங்கும் சக்தியோ மக்களுக்கு இப்போது இல்லவே இல்லை.

அதே நேரம் - ஒர் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு பெறக்கூடிய புறச்சூழல் இந்தப் பூலோகத்திலும் இப்போது இல்லை.

ஆயுதப் போராட்டத்தைப் பின்புலமாக வைத்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் காலம் - உண்மையில் செப்ரெம்பர் 11, 2001 அன்றுடன் இந்த உலகத்தை விட்டும், கடந்த மே 18, 2009 அன்றுடன் தமிழர்களை விட்டும் போய்விட்டது.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதென்பது வரலாற்றுப் புதைகுழியை அகழ்வாராய்ந்து உக்கிப் போன எலும்புகளை எடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல; பழைய பட்டறிவின் பாடங்களிலிருந்து எதிர்கால வாழ்வை ஒழுங்கமைப்பதற்கே.

வடிவத்தை மாற்றாது ஆயுதப் போராட்டத்தையே நாம் நடாத்திக்கொண்டிருந்த கடந்த 25 வருட காலத்தில் - இந்தப் பூலோகம் நான்கு உலக ஒழுங்குகள் ஊடாக மாறி, மாறி வந்துவிட்டது:

சில ஒழுங்குகள் எமக்குச் சாதகமானவையாக அமைந்தன; சில ஒழுங்குகள் எமக்குப் பாதகத்தையே செய்தன.

1. பனிப் போர் காலம் (..... - 1990): உலகம் இரண்டாகி அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையில் பிரிந்து நின்றது: ஏதோ ஒரு பக்கத்தோடு சார்ந்திருந்து - அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஏது நிலைகள் அப்போது இருந்தன; இது எமக்குச் சாதகமாய் அமைந்தது. தென்னாசியாவின் புவிசார் அரசியல் (Geo-Politics) காரணிகளால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் முனைப்புப் பெற்றது.

2. பனிப் போருக்குப் பின்னான காலம் (1990 - 2001): கொம்யூனிசம் கரைந்து போக, ஒற்றை வல்லரசாகிய அமெரிக்காவின் கீழ் உலகம் திரண்டது: மேற்கின் நலன்சார்ந்த ஆயுதப் போராட்டங்கள் வெல்ல வைக்கப்பட்டன. தென்னாசியப் பிராந்தியம் முக்கியமற்றதாக இருந்ததாலும், ராஜீவ் காந்தியின் இறப்போடு விலகி நிற்கும் கொள்கையை இந்தியா கடைப்பிடித்ததாலும் - இந்தக் காலமும் எமக்குச் சாதகமாய் அமைந்தது; தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இன்னும் சற்று வளர்ச்சி கண்டது.

3. செப்ரெம்பர் 11-க்குப் பின்னான காலம் (2001 - ....): பனிப்போர் காலத்தைப் போலவே இந்தத் தடவையும் உலகம் இரண்டாகி நின்றது: ஆனால், இந்தத் தடவை அரசுகள் (States) எல்லாம் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு அரசு-அல்லாத-ஆயுத-இயக்கங்களை (Non-State-Armed-Actors) அடுத்த பக்கத்தில் வைத்தன; "பயங்கரவாதிகள்" என்று அவர்களுக்குப் பெயர் சூட்டின. நியாயபூர்வமான வேட்கைகளுக்காகக் கூட (Legitimate Aspirations) ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உலக அரங்கிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது.

4. புதிய பனிப் போர் காலம் ( 2005 - ....): பூகோள வல்லரசாக எழுச்சி கொள்ளும் சீனாவுக்கு இந்து சமுத்திரம் தேவைப்பட்டது; அது சிறிலங்காவுக்கு உதவியது. புலிகளை அழிக்க விரும்பிய இந்தியாவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது; அதுவும் சிறிலங்காவிற்கு உதவியது.

பொருளாதார ரீதியில் சீனாவோடு சார்ந்திருந்ததால் இந்து சமுத்திரத்தில் அதன் ஆதிக்கத்தை நேரடியாக எதிர்கொள்ள வழியற்றிருந்த அமெரிக்காவுக்கு அதைச் செய்வதற்கு இந்தியா தேவைப்பட்டது; முடிவாக, இந்தியாவை மீறி தென்னாசியாவில் மேற்குலகம் ஒரு துரும்பைக் கூட அசைக்க விரும்பாத சூழல் பிறந்தது.

அவரவர் புவிசார் நலன்களுக்காக (Geo-Political Interests) ஒவ்வொரு நாடும் ஒவ்வொன்றைச் செய்ய, மே 21, 1991-க்குப் பழி தீர்க்க இந்தியா தன் பங்கைச் செய்ய - மே 18, 2009 அன்று தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நிரந்தரமான முடிவுக்கு வந்துவிட்டது.

இப்போது நாம் - உலகச் சூழலுக்கு ஏற்ற வேறு வழிகளைப் பார்க்க வேண்டும்
கடந்த 60 ஆண்டு காலத்தில் முதற் தடவையாக - தமிழ்த் தேசிய இனம் இப்போது தான் என்றுமில்லாத அளவுக்குப் பலவீனமாகி நிற்கின்றது.

தமிழ்த் தேசிய இனம் என நான் இங்கு குறிப்பிடுவது தமிழைத் தாய் மொழியாகப் பேசும் எல்லோரையும் சேர்த்த ஒரே மக்கள் இனம்.

எமது இனம் இப்போது எல்லா வழிகளிலும் பூதாகரமான பேராபத்தை எதிர்கொண்டு நிற்கின்றது.

எம்மைக் கொன்றொழித்துவிட்டு, எஞ்சியோரைத் துரத்தியடித்துவிட்டு, மிஞ்சியோரைத் தடுப்பு முகாம்களுக்குள் போட்டு அடைத்துவிட்டு பெளத்த சிங்களப் பேரினவாதப் பூதம் இப்போது திமிரோடு நிற்கின்றது.

எமது சமூகக் கட்டமைப்பினதும் பொருளாதார வாழ்வினதும் ஆதாரமான எம் நிலங்களை விழுங்கிவிட்டு அந்தப் பேரினவாதப் பூதம் இப்போது ஏப்பம் விட்டு நிற்கின்றது.

தமிழரது தாயகக் கோட்பாடும், தேசியத் தன்மையும், இனத் தனித்துவமும், அவற்றின் விளைவாகத் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளும் அந்தப் பேரினவாதப் பூதத்தின் கைகளில் முழுமையாகச் சிக்கி அழிவை எதிர்கொண்டு நிற்கின்றன.

எமக்கு முன்னால் இப்போது மிகப் பெரிய ஒரு களம் விரிந்து கிடக்கின்றது.

இது புதிய களம்; புதிரான களம்; இரும்பினால் ஆன ஆயுதங்கள் கொண்டு வெல்ல முடியாத களம்; அறிவின் உச்சப் பயன்பாட்டுக்கான களம்.

அன்புடையோர்களே!

எம் மத்தியில் கருத்து வேற்றுமைகள் இருந்தன; இப்போதும் இருக்கின்றன. ஆனால், அது செல்ல வேண்டிய பாதை பற்றியதே அல்லாமல், செல்ல வேண்டிய இலக்கு பற்றியதல்ல.

எம் மத்தியில் குழப்ப நிலை இருந்தது; இப்போதும் இருக்கின்றது. ஆனால், அது தமிழீழத் தனியரசு சாத்தியமானதா இல்லையா என்பதே அல்லாமல், தமிழீழத் தனியரசு தேவையானதா இல்லையா என்பது பற்றியதல்ல.

சிங்களப் பேரினவாதம் தானாகவே முன்வந்து தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்ற தெளிவிலும், ஏதோ ஒரு வகையில் நாமாகவே போராடித்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவிலும் - எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளோ அல்லது குழப்ப நிலைகளோ இருந்ததில்லை; இப்போதும் இல்லை.

அந்த முடிவோடும் தெளிவோடும் தான் - நாம் வரித்துக்கொண்ட அதே இலட்சியத்தைத் தாங்களும் வரித்துக்கொண்டு தான் - எம் தேசத்தின் 30 ஆயிரம் புதல்வர்களும் எம் தேசியத் தலைவனும் தமிழீழத் தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்தார்கள்; தங்கள் வாழ்வை அர்ப்பணித்துப் போராடினார்கள்; தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.

அண்ணனை நேசிப்போர் அவருக்காகவும், அவரை விமர்சிப்போர்கள் - அவருக்காக அல்லாவிட்டாலும், எமக்காகத் தமது உயிர்களை தந்த அந்த 30 ஆயிரம் போராளிகளின் உயிர்களுக்காகவேனும் அவர்கள் அணிவகுத்த அதே கொடியின் கீழே அணிவகுப்போம்.

பிரிந்து சிதறி நாங்கள் தூள்களாகப் போய்விடும் நாளுக்காகத் தமிழர்களின் எதிரிகள் காத்திருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் போர் வலுவை வீழ்த்திவிட்டபின், தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்து - எங்களின் அரசியல் திறனையும் நொருக்கி - எங்களை நிரந்தர அடிமைகளாக்கும் காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மதங்களாக, குழுக்களாக, கட்சிகளாக, பிரிவுகளாகத் திசைக்கு ஒன்றாய் சிதறாமல் - சகிப்புத் தன்மையுடன், உள்வாங்கும் மனதுடன், விட்டுக்கொடுப்புடன், தவறுகளை ஏற்கும் திறந்த இதயத்துடன் - நாம் எல்லோருமே 'தமிழர்கள்' என ஒன்றிணைய வேண்டும்.

அந்த ஒன்றிணைவு இல்லையென்றால் எம்மில் யாருக்குமே எதுவுமே இலங்கைத் தீவில் கிடைக்கப்போவதில்லை.

எமக்கிடையில் இறுகிய ஒற்றுமையும், மனம் திறந்த கூரிய சிந்தனையும், எதிர்காலம் பற்றிய தெளிந்த பார்வையுமே - எம் எல்லோருக்குமான எல்லாவற்றையும் வென்றெடுப்பதற்கு நாம் கையிலெடுக்க வேண்டிய ஆயுதங்கள்.

புதிய வடிவத்தில், புதிய பரிமாணத்தில், புதிய சூழலிற்குள் நுழைகின்ற தமிழீழப் போரில் இந்த ஆயுதங்கள் இருந்தால் எந்தப் பலத்தாலும் எங்களை வீழ்த்த முடியாது.

தமிழீழப் போர் - 1 மற்றும் தமிழீழப் போர் -2 ஆகியன கற்றுத் தந்திருக்கும் பாடங்களை அடிப்படையாக வைத்து தமிழீழப் போர் - 3 இனை நாம் வடிவமைக்க வேண்டும்.

அனைத்துலக உறவு விடயங்களில் Smart Power என்ற ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது.

Hard Power என்பது போர்-சார் பலத்தைக் குறிப்பதும், Soft Power என்பது போர்-சார்பற்ற ஏனைய பலங்களைக் குறிப்பதுமாகும்.

Smart Power என்பது - ஏனைய நாடுகளுக்கு இடையில் இருக்கும் உறவு, உறவற்ற மற்றும் முரண்பட்ட நிலைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி - Hard Power மற்றும் Soft Power மூலம் சாதிக்க முடியாத விடயங்களைச் சாதிப்பதற்கு ஒரு நாடு அல்லது இனம் கொண்டிருக்கும் நுண்ணறிவுப் பலத்தைக் குறிப்பதாகும்.

இன்று பெரும் உலக வல்லரசுகளே ஒன்றை ஒன்று மேவி எழுவதற்காக இந்த நுண்ணறிவுப் பலத்தைத் தான் பயன்படுத்தகின்றன; சிறிலங்கா கூட இதே நுண்ணறிவுப் பலத்தைப் பயன்படுத்தித் தான் விடுதலைப் புலிகளின் இராணுவ இயந்திரத்தைத் தகர்த்தது.

போர்-சார் பலம் ஒத்துவராத ஒர் உலக ஒழுங்கு கால கட்டத்தில் நாம் எமது Hard Power மூலம் பேராட்டத்தை நகர்த்த முனைந்ததால் - இன்று அந்தப் பலம் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது. Soft Power என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இப்போது எதுவுமே எம்மிடம் இல்லை.

இப்போது - எம்மிடம் உள்ளதும் நாம் பயன்படுத்தக்கூடியதும் எமது Smart Power-ஐத் தான்.

எந்த 'புவிசார் நலன் அரசியல்' எமது ஆயுதப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்ததோ, அதே 'புவிசார் நலன் அரசியல்' எமது போராட்டத்தை வெல்ல வைக்கும்.

அதற்கான ஏது நிலைகளை நாமும் சேர்ந்தே உருவாக்க வேண்டும்; உருவாகி வருகின்ற ஏது நிலைகளைச் செவ்வனே பயன்படுத்த வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன்

உணர்ச்சிவசப்படுவதால், அல்லது உணர்ச்சியை அடிப்படையாக வைத்து அரசியல் காய்களை நகர்த்த முனைவதால் எமக்கு ஆகப்போவது எதுவுமேயில்லை என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

எமது பயணத்தின் இறுதி இலக்கு தமிழீழத் தனியரசை அமைப்பது தான். ஆனால், அந்தப் பயணம் மிக நீண்டது; மிக நெருக்கடியானது; நுட்பமான சவால்கள் பல நிறைந்தது.

இந்தப் பயணத்தில் - பழைய வண்டிகளைக் கைவிட்டுவிட்டு சில புதிய வண்டிகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்; இந்தப் பயணத்தின் பாதை சில இடங்களில் நெடுஞ்சாலைகளாகவும் சில இடங்களில் குறுந்தெருக்களாகவும் இருக்கும்; இந்தப் பயணத்தின் வழியே சில இடைநிறுத்தங்கள் வரும்; அவற்றில் நாம் சில காலம் தரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எமது எதிரிகளை முறியடிப்பதற்காக பழைய மற்றும் புதிய நண்பர்கள் சிலரை எம் கூடவே அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

புதிய வண்டிகளுக்கு மாறுவதோ, குறுந்தெருக்களால் மெல்ல வளைவதோ, இடைநிறுத்தங்களில் சில காலம் தரிப்பதோ, பழைய நண்பர்கள் சிலரை மீண்டும் அணைப்பதோ, புதிய நண்பர்கள் சிலரை எம்மோடு சேர்ப்பதோ - இலக்கை நாம் மாற்றிவிட்டதாகவோ, அல்லது கூடப் பயணிப்போர்களை ஏமாற்ற முனைவதாகவோ அர்த்தமாகாது; அவ்வாறாக தயவு செய்து அர்த்தப்படுத்தியும் விடாதீர்கள்.

எமக்கு அருகிலே கோலோச்சுகின்ற ஒரு பெரும் வல்லாதிக்கச் சக்தி இந்தியா; நவீன உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத கேந்திர அதி முக்கியத்துவத்தை அது இப்போது பெற்றுவிட்டது; இந்தியாவை மீறி தென்னாசியக் கடலில் ஒரு அலை கூட அசையப் போவதில்லை என்பது நாமே பட்டறிந்துவிட்ட பாடம்; பழைய வீராப்புப் பேச்சுக்களோடு மல்லுக்கு நிற்பது வெறும் அட்டைக் கத்தி வீரம்; இந்தியாவோடு அனுசரித்து, அதனை அரவணைத்து, இரு தரப்பு நலன்களையும் அகத்திலெடுத்து, அதன் துணையோடு நமது போராட்டத் தேரை நாம் முன்நகர்த்த வேண்டும்.

உலகப் பெரும் சக்திகள் பலவும் தமிழர் பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்துள்ளார்கள்; ஆனால், அவர்களின் நலன்களும் எமது போராட்ட வடிவமும் இதுவரை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு இருந்துவிட்டன. இனிமேல் - நமது புதிய போராட்ட வடிவத்தின் கீழ் - நாம் அவர்களது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெறவேண்டும்.

கர்வத்துடனும், கெளரவத்தடனும் வாழ்ந்த எமது மக்கள் கம்பி வேலிகளுக்குப் பின்னால் கண்ணீரோடு நிற்கின்றார்கள்; அவர்களைப் பக்குவமாக மீட்டெடுத்து அவர்களது பழைய கம்பீர வாழ்வை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

இத்தனை ஆண்டு காலம் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் பலர் சிங்களத்தின் சிறை முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்; அவர்களையும் மெதுவாக மீட்டெடுத்து அவர்களது சகவாழ்வுக்கு நாம் வழிசெய்ய வேண்டும்.

இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் பணிகள் நிமித்தம் அனுப்பப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த எமது போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்.

உணர்ச்சிப் பெருக்கோடு நாம் வெளி உலகிலிருந்து செய்ய முனையும் எதுவும், சிங்களப் பேரினவாதத்தை உசுப்பேற்றி அங்கே ஆபத்தில் இருப்போரை இன்னும் பேராபத்திற்குள் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடாது.

தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்துவதற்கு இலங்கைத் தீவில் மிஞ்சியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - சிறிலங்காவின் அரசியலமைப்பக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டியுள்ளது; வெளியிலிருந்து நாம் எடுக்கும் அரசியல் முயற்சிகள் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துவிடவும் கூடாது.

இவ்வாறாக - எமது நீண்ட சுதந்திரப் பயணத்தில் - எம் ஒவ்வொருவரது தோள்களிலும் வரலாறு சுமத்தியிருக்கும் இந்த உடனடிக் கடமைகளை நிறைவு செய்யும் அதே வேளையில் - எமது நிரந்தர அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

இரண்டு பூர்வாங்க வேலைத் திட்டங்கள் இப்போது தொடக்க கட்டத்தில் உள்ளன:

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் [Transnational Government of Tamil Eelam]

2. பூகோளத் தமிழர் பேரவை [Global Tamil Forum]

முதலாவது - ஒர் அனைத்துலக அங்கீகாரத்துக்கானது [International Recognition]; அதிகாரபூர்வமானது: அடுத்தது - எமது இன ஒருங்கிணைவுக்கானது.

ஒன்று - அரசு; Government: அடுத்தது - மக்கள் சமூகம்; Civil Soceity

அரசு என்பது மக்கள் சமூகத்தை வழிநடாத்தும் ஒரு தலைமைச் சக்தியாகவும், மக்கள் சமூகம் அந்த அரசைத் தாங்கி நிங்கும் ஒரு தூணாகவும் - ஒன்றுக்கொன்று துணையாக, ஒன்றோடொன்று இணையாக - ஒரே நேரத்தில் ஒரே திசையில் பயணிக்க வேண்டியவை.

இந்த இரண்டு வேலைத் திட்டங்களிலும் முடிந்த முடிவென்று எதுவும் இல்லை; இரண்டு திட்டங்களுமே கருத்தாடலுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளவை.

சூட்டப்பட்டுள்ள பெயர்கள் முதல் கூட்டப்பட்டுள்ள குழுக்கள், தீட்டப்பட்டுள்ள செயற்திட்டங்கள் வரை எல்லாமே - பொருத்தமான இறுதி வடிவத்தைப் பெறும் வரை தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.

சாத்தியம் மற்றும் சாத்தியமின்மையைக் கலந்தாலோசித்து, நல்ல மற்றும் தீய விளைவுகளைக் கண்டறிந்து, ஆதரவு மற்றும் ஆதரவற்ற நிலைகளில் கருத்தொருமித்து - விடுவதை விட்டு, எடுப்பதை எடுத்து - ஒரு தேர்ந்த செயலிணக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

பாலா அண்ணை ஒருமுறை சொன்னார் - "ஒரு தலைமைத்துவத்தின் அழகு என்பது, செல்ல வேண்டிய இலக்குப் பற்றிய தெளிவில் சலனமின்றி, காலச்சூழலுக்கு எற்ப அது மேற்கொள்ளும் அசைவுகளிலேயே தங்கியுள்ளது."

தமிழ்த் தேசிய இனத்திற்கு ஓர் அழகான தலைமைத்துவத்தை வழங்கவேண்டிய பொறுப்பு அனைத்தலக தமிழ் சமூகத்தின் கைகளிலேயே இப்போது உள்ளது.

தி.வழுதி

Tuesday, October 6, 2009

மளிகை கடைக்காரர்தான் இனி பில்கேட்ஸ்


மளிகை பொருட்களுக்கு ஏற்றுமதி விலை எல்லாம் எகிரிப்போச்சாம் .உள்ளூர்ளையும் பருப்புகளோட விலைய கேட்டாலே தலையெல்லாம் சுத்துது. அத பத்தின கொஞ்மளிகைப் சம் நோட்டத்த பாப்போமா!

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் விலை கிடு, கிடுவெனஉயர்ந்துள்ளது.

ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் தொடர்மழையால் இந்த விலைஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை சமயத்தில் பருப்புகளின் விலை அதிகரித்துள்ளது பொதுமக்களை வெகுவாகபாதித்துள்ளது. கடந்த ஆறு வாரங்களாக துவரம் பருப்பின் விலையில் மாற்றம் இல்லாமல்இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திங்கள்கிழமை சந்தை நிலவரப்படி, மூட்டை ரூ. 8,200-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ. 300 உயர்ந்து மூட்டை ரூ. 8,500-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. இருந்தாலும் சில்லறை விற்பனையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிலோ ரூ. 86-க்கு விற்கப்பட்டது. இரண்டாம் ரக துவரம்பருப்பு மூட்டை ரூ. 7,200-ல் இருந்து 7,500-க்கும்அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ. 74-க்கு விற்கப்பட்டது. மலேசியாவில் பாமாயில் விலைதொடர்ந்து சரிந்து வருவதால் பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் வகைகள் விலை குறைந்துவருகிறது என்றும் தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. சொரூபன் கூறினார்.

விலை நிலவரம்: (அடைப்புக்குள் பழைய விலை)

உளுத்தம் பருப்பு ரூ. 70 (ரூ. 66)

மியன்மார் உளுத்தம் பருப்பு ரூ. 60 (ரூ. 58)

கடலைப் பருப்பு ரூ. 35

பாசிப் பருப்பு ரூ. 74 (ரூ. 70)

இரண்டாம் ரக பாசிப் பருப்பு ரூ. 68 (ரூ. 62)

மைதா ரூ. 30 (ரூ. 23)

இரண்டாம் ரக மைதா ரூ. 20 (ரூ. 18)

ரவை ரூ. 24 (ரூ. 22)

இரண்டாம் ரக ரவை ரூ. 20 (ரூ. 18)

பாமாயில் ரூ. 36 (ரூ. 40)

சூரியகாந்தி எண்ணெய் ரூ 46 (ரூ. 50)

கடலை எண்ணெய் ரூ. 60 (ரூ. 65)

நல்லெண்ணை ரூ. 105

இரண்டாம் ரக நல்லெண்ணெய் ரூ. 60 (ரூ. 70)

தேங்காய் எண்ணெய் ரூ. 70 (ரூ. 80)

இரண்டாம் ரக தேங்காய் எண்ணெய் ரூ. 60 (ரூ. 70)

Monday, October 5, 2009

சிந்திக்க வேண்டும் தமிழர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் என வர்ணிக்கப்பட்ட யுத்தத்தில் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்த சுமார் 3 இலட்சம் மக்கள் இன்று வன்னியின் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். "பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த" கதைக்கு ஒப்பான வகையில் அவரகள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்தள்ள வேளையிலும் அவர்களின் மீளக் குடியேற்றம் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கை எதனையும் சிங்கள அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. 180 நாட்களுக்குள் அவர்களை மீளக் குடியமர்த்தப் போவதாக அறிவித்திருந்த அரசு, தற்போது அந்த அறிவிப்பிலிருந்து முற்றிலுமாகப் பின்வாங்கியிருக்கின்றது.


'உலகில் யுத்தம் நடந்த இடங்களில் பார்த்திராத அவலத்தை சிறி லங்காவில் கண்டேன்" என ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்ததன் மூலம் யுத்தத்தின் சேதாரங்கள் என்னவென்பதை அவர் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

இது தவிர, பன்னாட்டு சுதந்திர ஊடகங்களும் அவ்வப்போது யுத்த அவலங்களையும், வன்னித் தடுப்பு முகாம்களில் அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் தொடர்பிலும் தகவல்களை வெளியிட்டு வந்தன. இந்தத் தகவல்கள் முழுமையானவை அல்ல என்பதை, சிறி லங்கா மனித உரிமைகள் சட்டத்தரணியும், இமடார் நிறுவனத் தலைவியுமான கலாநிதி நிமல்கா பெர்ணாண்டோ அண்மையில் தமிழ்நாட்டில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் உறுதிப் படுத்துகின்றன.

~தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிறோம|; என இதுநாள்வரை கூறி வந்தபல தமிழர்களே, இன்று வாய்மூடி மௌனிகளாக உள்ள நிலையில் தனது உயிருக்கு நிச்சயம் ஆபத்து உள்ளது என்பதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டும் கலாநிதி நிமல்கா இவ்வாறு தைரியமாகக் கருத்து வெளியிட்டமைக்காக அவரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழர்களை சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுக் கொடுமைப்படுத்தி வருகையில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகையில், அந்தச் சமூகத்தின் மத்தியிலே இருந்து - எதுவித உள்நோக்கமும் இன்றி - இத்தகைய கருத்துக்கள் வெளிவருவது என்பது ஆறுதலான ஒரு விடயம்.


அதேவேளை, அவர் வெளியிட்ட தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளன. குறிப்பாக, இளம் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படையினரின் பாலியல் பசியைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தமை கண்ணில் நீரை வரவழைக்கிறது.


யுத்தம் மிகவும் உக்கிரமமாக நடைபெற்ற இவ்வருட ஆரம்பத்தில் 'தமிழ்ப் பெண்களை உங்களுக்கு இரையாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களை கடலுக்கு இரையாக்குங்கள்" என சிறி லங்காவின் முன்னை நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இந்தச் செய்தி உண்மையோ, பொய்யோ நாமறியோம். ஆனால், நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கும் போது சரத் பொன்சேகாவின் பாதையையே படையினர் பின்பற்றுவது தெரிகின்றது.


வன்னித் தடுப்பு முகாம்களில் நடைபெற்றுவரும் அவலம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அந்த மக்களின் துயரம் ஒட்டு மொத்தமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தவொரு மட்டத்திலும் எடுக்கப் படுவதாகத் தெரியவில்லை. மறுபுறம், ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்தும் காத்திரமாக குரல் எழுப்பப் படுவதாகவும் தெரியவில்லை.


தடுப்பு முகாம் மக்களின் துயரம் முடிவடையாத சூழலில் பருவமழை வேறு அந்த மக்களை வெகுவாகச் சோதித்து வருகின்றது. மழை காரணமாக உருவான வெள்ளத்தினால் முகாம்களுக்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் வெட்டவெளியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப் பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.


இந்த வேளையில் ஈழத் தமிழர் மத்தியில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இந்த மக்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் தந்து வருகின்றது. இந்தக் குரலுக்கு ஆதரவாக, பின்பலமாக இருக்க வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சீரான தலைமை இல்லாத நிலையில் சிதறுண்டுபோய்க் கிடக்கின்றார்கள். இந்த நிலை வெகுவிரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.


'எங்கள் பகைவர் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற வாசகம் இன்று பொய்த்துப் போயுள்ளது. தமிழர்கள் மத்தியலே இன்று முன்னெப்போதையும் விட அதிக அளவிலான பிளவுகளும், பேதங்களும், அவநம்பிக்கையும் நிலவி வருகின்றன.


இதற்கெல்லாம் காரணம் எம் மத்தியிலே சரியான அரசியல் தலைமை இல்லாமையே. தலைமைத்துவ வழிபாடு என்ற அபாயகரமான சிந்தனையின் வழி வளர்க்கப்பட்ட ஈழத் தமிழ்ச் சமூகத்தில், தேசியத் தலைவர் பிரபாகரனின் வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை. அவரைப் போன்ற மற்றுமொரு ஆளுமைமிகு தலைமை இப்போதைக்கு உருவாவதற்கான சாத்தியங்களெதுவும் தென்படவும் இல்லை.


ஆனால், மீகாமன் இல்லாத கப்பல் போன்று தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் நீண்ட காலத்துக்குப் பயணிக்க முடியாது. எனவே, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரு உறுதியான, பலமான, விவேகமான தலைமைத்துவம் அவசரமாகவும், அவசியமாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில், தமிழ்ப் புத்திஜீவிகள் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் அதிக கவனஞ் செலுத்த வேண்டும்.

நாடு கடந்த தமிழ் ஈழம் சாத்தியமே .நார்வேயில் ஆலோசனைக் கூட்டம்நாடு கடந்த தமிழீழம் தொடாபிலான அரசினை அமைப்பதற்று அமைக்கப்பட்ட செயணியின் சர்வதேச ஆலோசகர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நோர்வேயில் சனி,ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஒஸ்லோவில் உள்ள தமிழர்வள ஆலோசனை மைய ரோமன் வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் சிறிஸ்கந்தராசா நடராசா தலைமைவகித்தார்.


இந்த நிகழவில் நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் செயலணியின் இணைப்பாளரான சட்டத்தரணி வி.உருத்திரகுமாரன் வீடியோ மூலம் கூட்டத்தொடரில் பங்குகொண்டு நாடுகடந்த தமிழீழம் தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளித்தார்.


இந்த கூட்டத்தொடரில் ஏராளமான தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டு தமது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.


இன்றைய காலச் சூழலில் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி, தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய அடிப்படை உரிமைக் கோட்பாடுகளுக்கு ஊடாக தமிழீழ மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட இலக்கின் இன்றைய வரலாற்றுத் தேவையாக நாடு கடந்த தமிழீழ அரசு அமையவுள்ளதாக உருத்திரகுமாரன் குறிப்பிட்டார்.


கொடுங்கோன்மை அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் இனங்களின் தன்னாட்சி உரிமை பற்றிய அனைத்துலக சட்டங்களை மேற்கோள் காட்டிய உருத்திரகுமாரன் அவர்கள், அனைத்துலக அரங்கில் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் புறநிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்கும் தமிழீழ மக்களின் உரிமையை ஏற்றுக்கொள்ள அனைத்துலகம் தலைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் நேரடியான தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதே இந்த அமைப்பிற்கு வலுச் சேர்க்கும். நேரடியான தேர்தல்களே அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள், நாடு கடந்த தமிழீழ அரசின் மீது உரித்துணர்வு கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும் உருத்திரகுமாரன் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.


இன்றைய உலக ஒழுங்கினை ஆழமானதும் கூர்மையானதுமான அரசியல் சிந்தனைக்கு உட்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான உலகளாவிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்த வேண்டும் என அவுஸ்ரேலியாவில் இருந்து காணொலி இணைப்பு மூலம் உரையாற்றிய மருத்துவக் கலாநிதி சிவநேந்திரன் சீவநாயகம் தெரிவித்தார்.


நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கத்திற்கான ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சட்டவாளர் கரண் பார்க்கர் மற்றும் சுவீடனைச் சேர்ந்த சமய வரலாற்றுத் துறை பேராசிரியர் பீற்றர் சால்க் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.


நாடு கடந்த அரசானது பரந்துபட்ட மக்களின் பங்களிப்பை வேண்டி நிற்பதாக இக்கூட்டத்தில் வேண்டிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


அஜித் கட்டும் ஏரோட்ரம்எப்படி இருந்த நான் ...
இப்படி ஆயிட்டேன்!

மதுராந்தகத்துக்குப்
பக்கத்திலிருக்கும் ஒரு சின்னக் கிராமம் இப்போது நட்சத்திர அந்தஸ்து பெறத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது மின்னல் சித்தாமூர்.

என்ன நடக்குது அங்கே..?

இங்குதான் தல அஜீத் தனக்கே தனக்கென குட்டி ஏரோட்ராம் ஒன்றை உருவாக்கி வருகிறாராம்.

மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ் என ரேஸ் பித்தராக இருந்த அஜீத், சில பல காரணங்களுக்காக அவற்றிலிருந்து தன்னை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்ள வேண்டி வந்தது. இப்போது யாருக்கும் தொந்தரவில்லாத, குட்டி விமான விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது அஜீத் வசம் இரு குட்டி விமானங்கள் உள்ளனவாம்.

இந்த விமானங்களை ரிமோட்டில் இயக்குவதுதான் தலயின் தலையாய பொழுதுபோக்கு. தவிர நிஜ விமானத்தை இயக்கவும் கூட இவருக்குத் தெரியுமாம். மனைவி ஷாலினிக்கும் இந்தக் குட்டி விமானங்களை இயக்குவதென்றால் கொள்ளைப் பிரியம்.

இத்தனை நாள் இந்த குட்டி விமானங்களை பெசன்ட் நகர் பீச்சில் இயக்கிக் கொண்டிருந்த அஜீத் இப்போது, இதற்காகவே தனி ஏர்போர்ட் ஒன்றை உருவாக்கி வருகிறார். படப்பிடிப்பு தவிர்த்த நேரத்தை இந்த ஏர்போர்ட்டில் விமானம் இயக்குவதில் கழிக்க ஆசையாம்.


Thursday, October 1, 2009

புலிகளுக்கு ஆதரவு அளித்தால் ஆயிசுக்கும் ஜெயில் அமெரிக்காவில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ் தொழிற் கட்சி ஆகிய தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என ஒபாமா அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த இரண்டு அமைப்புக்களுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென லொஸ் ஏஞ்சல்ஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்க நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளன.

எனினும், இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும், 2010ம் ஆண்டு ஜூன் மாதமளவில் இந்த வழக்க விசாரணைகள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவோருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுட் காலம் வரையில் சிறைத்தண்டனை வழங்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்த சட்டம் மிகவும் முக்கியமானதென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், குறித்த இரண்டு அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவதனை சட்ட ரீதியாக அங்கீகரிக்குமாறு அமெரிக்க மனித உரிமை நிறுவனம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்ட அங்கீகாரம் வழங்குமாறு தெரிவித்து குறித்த நிறுவனம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

Saturday, September 5, 2009

இது எங்கள் போராட்டம்இது எங்கள் போராட்டம்
இதயத்தில் ஓர் மாற்றம்
உள்ளுக்குள் பூகம்பம் -இது
உதயத்தின் ஆரம்பம்

கதிரவனை கரம்பிடிக்க
உதிரங்கள் கொதிக்கிறது
சரித்திரம் கரைபுரள
சமுத்திரம் சுரக்கிறது

அரசியல் அடிஎடுக்க
ஆள்வதற்கு கொடிபிடிக்க
நரம்புகள் துடிக்கிறது-இங்கே
வரம்புகள் வெடிக்கிறது

இளமை இரத்தம் கொதிக்கிறது -இங்கு
இன்னொரு சூரியன் உதிக்கிறது
தமிழ்க்கொடி விண்ணில் பறக்கிறது-அதை
தடுக்க மண்ணே சிவக்கிறது

அகிலம் தோறும் கரம் பிடித்தால்
ஆண்டவனுக்கே படியளப்போம்
விளிம்பில்புரட்சி வெடித்துவிட்டால்
விடியல் இங்கே மலர்ந்து விடும்.

உனக்குள் ஓர் சுடர்வெளிச்சக்கீற்றில் விரிசல்கொண்டால் விடியல் இங்கேது -மெழுகு
உடலைஉருக்க அழுதுநின்றால் ஒளியும் கிடையாது
துன்பம் வந்தபோதும் உந்தன் துணிவை இழக்காதே
தொலைந்துபோன தோல்வியைஎண்ணி தினமும் வருந்தாதே

காற்றைப்போல் பாட்டுப்பாடி சுற்றி விளையாடு -நல்ல
காலம்சொல்லும் நேரம்பார்த்து வெற்றி நடைபோடு.
கடந்துவந்த பாதை தன்னை எண்ணி அசைபோடு
கவிதைநாயகி காலில் சலங்கை கட்டி இசைபாடு

துரத்திப்பார்க்கும் தோல்வி இனம்பிரித்துப் பார்ப்பதில்லை -நீ
துணிந்து நின்று எதிர்த்தால் அதுவும் நிலை போவதில்லை.
தூரம்என்ன நேரம்என்ன எதுவும் பார்க்காதே
ஞாயிறு திங்கள் விடுமுறை என்று பொழுதைப்போக்காதே

இரவில் சிரிக்கும் விண்மீன் கூட்டம் எண்ணக் கணக்கில்லை
இதுவரை எங்கள் புகழ் வரும் என்ற கணக்கும் உனக்கில்லை
சிலிர்க்க வைக்கும் சிந்தனைச் சுடர்கள் உனக்குள் இருக்குதடா
சில்லறை தொலைந்து போனதை எண்ணி எதற்கு வருத்தம்டா!

Friday, August 28, 2009

பிரபாகரனின் மாவீரர் நாள் உரை -நிறைவேறும் நமது தமிழீழ கனவு-நவம்பர் 27 , 2008எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தைஇ ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசியநாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன்இபாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம்கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்துவருகிறது. சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டுவருகிறது.

தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம். இந்த நோக்கத்தைச் செயற்படுத்திவிடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்துவருகிறது.

தனது முழுப் படைப்பலத்தையும் ஆயுதபலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்களத்தேசம் எமது மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்திவருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடிவருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இனஅழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

சிங்களத்தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழவிரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள்.

அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது. சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுசெய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை.

சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினாலன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

உலக அரங்கிற் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறீலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்துபோன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்களத்தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது. எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்தன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டின் புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்புமீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தின் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம்கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப்பணிகளைப் பெரும் குற்றவியற்செயல்களாக அடையாளப்படுத்தின் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒருபக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்;, பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்களத்தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

சிங்களத்தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர்தேசத்தின்மீது போர் தொடுத்தது. சர்வதேசத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலகநாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலைகூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கிவருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இனஅழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்துவருகிறது.

இன்று சிங்களத்தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ்த்; தமிழர்களை ஆட்சிபுரியவேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனாற் போர் தீவிரம்பெற்று, விரிவுபெற்று நிற்கிறது. இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போரன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இனஅழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது.

போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டுவருகிறது. பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையும் எறிகணைவீச்சுக்களையும் நடாத்திவருகிறது. சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது.

பிறப்பிலிருந்து இறப்புவரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது. எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்துவருகிறது. பெரும் அநீதிகளை இழைத்துவருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து இ எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்தச்சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறீலங்காப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமற்போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப்பகுதிகளில் தமிழர் காணாமற் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகிவிட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இனஅழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறைவைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல்போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சுவட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது. இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சிகொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிடமுடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள்.

அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம்கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கேயன்றி வேறெதற்காகவுமன்று. உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்திவருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்தமக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்துநிற்கிறோம். எம்மைத் தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கிஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்துவருகின்ற இந்தக் காலமாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்குமிடையே பகைமையை வளர்த்துவிட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச்சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்றபோதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்துநிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்துவிடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய்வடிவம் எடுத்துநிற்கிறது. அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர்வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்கமுடிகிறது. போரைக் கைவிட்டு, அமைதி வழியிற் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல்கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமரமக்கள் வரை போருக்கே குரல்கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டிநின்ற எம்மக்களிடம் சிங்களத்தேசந்தான் போரைத் திணித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்கமறுத்து, அதனை ஏளனஞ்செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்களத்தேசந்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்களத்தேசந்தான்.

சிங்களத்தேசம் ஒரு பெரும் இனஅழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்திவருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றிவருகின்றன. வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கடந்துசென்ற இந்த நீண்ட காலஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாகச் சிங்களத்தேசம் தனது படைக்கலச் சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலையவைத்திருக்கிறது. தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்கமறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்குத் தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது. புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்குத் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம்பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்கமறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது. சிங்களத்தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப்போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழத்தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையைத் திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Friday, August 21, 2009

தில்லாலங்கடி ராஜா-ரவி கைஸ்..சொந்தமாவே யோசிக்கத் தெரியாதா உங்களுக்கு..!ரீமேக்கே பொழப்புன்னு கடந்து சூப்பர் ஸ்டார் ஆகனும்னு நினச்சு 'குருவியா' பறந்தவரே இப்போ திருந்திட்டார்.இப்போ புதுசா கிளம்பியிருக்காங்க இன்னொருத்தவங்க.வேற யாரும் இல்ல நம்ம ஜெயம் ராஜா-ரவி கைஸ் தான் .
நம்ம ஹீரோ நடிச்சதுல நாலு படந்தான் ஹிட்டு.அதுவும் நம்ம டைரக்டர் ராஜா டைரக்ட் பண்ண படங்கள் தான்.(ஜெயம்,எம்.குமரன்,சம்திங் சம்திங்,சந்தோஷ் சுப்பிரமணியம்).இது நாலுமே தெலுங்குல வந்த பெரிய ஹிட்டான படங்களோட ரீமேக்கு.இல்ல இல்ல மார்பிங்(marphing),இந்த வோர்ட் தான் இதுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்.

இத்தனையும் வந்துடுச்சு.இனிமேவாச்சும் நம்ம டைரக்டர் சொந்த படம் எடுப்பார்னு ரசிகர்கள் நாங்க காத்திருந்தோம்.ஆனா சமீபத்துல வந்த விளம்பரத்த பார்த்த உடனே எனக்கு நம்ம டைரக்டர் மேல இருந்த நல்ல அபிமானம் போச்சு.
அது வேற ஒன்னும் இல்ல .இவங்களோட அடுத்த படத்தோட விளம்பரம்தான் .பேரு தில்லாலங்கடி.இவங்க செய்யற வேலைக்கு இது ரொம்ப பொருத்தாமான பேரு தான்.இந்த படம் சமீபத்துல தெலுங்குல வெளியான 'கிக்' அப்டிங்கற படத்தோட ரீமேக்கு.

ஏன் சார் அடுத்தவங்க கையையே நம்பி எறங்கனும்,நம்ம கதை மேல நமக்கே நம்பிக்கை இல்லைனா எப்படி..? தமிழன் கிட்ட இல்லாத திறமையா.இனிமேவாச்சும் தெலுங்கர்கள் கையை நம்புறத விட்டுட்டு சொந்த மூளைய கொஞ்சம் யோசிங்க..ரீமேக்க மட்டும் கைல வச்சிட்டு ரொம்ப நாள் ஓட்ட முடியாது.இப்பல்லாம் ஜனங்க எல்லா மொழி படத்தையும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.திருந்துங்கப்பா..!

அடங்காத அரக்கன், பறித்தான் இரண்டாவது உயிரையும். விழிப்புணர்வே ஒரே மருந்து..


செ‌ன்னை‌யி‌ல் ப‌‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌லு‌க்கு மேலு‌ம் ஒருவ‌ர் ப‌லியா‌‌கியு‌ள்ளா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 2 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை ‌கிழ‌க்கு கட‌ற்கரை‌ சாலை‌யி‌ல் உ‌ள்ள ஈ‌ஞ்ச‌ம்பா‌க்க‌ம் கோபா‌ல் நகரை சே‌‌ர்‌ந்த பிரான்சிஸ் (49) என்பவர் கடந்த 19ஆ‌ம் தேதி பன்றி‌க் காய்ச்சல் அறிகு‌றிகளுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் பன்றி‌க் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.