என்னைப் பற்றி

My photo
நான் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படிக்கிறேன். விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவன்.இங்கு உள்ளவற்றை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள் .

Tuesday, March 31, 2009


திமுக வேட்பாளர்கள் - ஓர் அறிமுகம்

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறியிருந்தார் திமுக தலைவர். அதன்படி பல தொகுதிகளில் புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். சில பழைய முகங்கள் தொகுதிகளை மாற்றிக்கொண்டுள்ளனர். இரண்டு திரை நட்சத்திரங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

1. தென்சென்னை - ஆர்.எஸ்.பாரதி

பிரபல வழக்கறிஞர். டான்சி நிலம் தொடர்பாக ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தவர். ஆலந்தூர் நகரமன்றத்தின் நிரந்தரத் தலைவர் போல செயல்பட்டுக் கொண்டிருந்தவர்.

2. வடசென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்

கட்சியின் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். அறிவாலயத்தில் அனுதினமும் தென்படக்கூடிய நபர். கடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போதே தேர்வு செய்யப்பட வேண்டியவர். மதிமுகவில் இருந்து வந்தவர்.

3. மத்திய சென்னை தயாநிதி மாறன்

புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை.

4. மதுரை - அழகிரி

பத்து எம்.பி தொகுதிகளுக்குப் பொறுப்பேற்று செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஒரே தொகுதியில் அவரை முடக்கிப்போட கட்சி முடிவு செய்துவிட்டது போல. எல்லாம் நன்மைக்குத்தான்.

5. பெரம்பலூர் - நெப்போலியன்

வில்லிவாக்கம் என்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மயிலாப்பூரில் பட்ட ரணத்தை ஆற்றிக்கொள்வதற்காக பெரம்பலூரில் நிறுத்தப்பட்டுள்ளார். நட்சத்திர வேட்பாளர்.

6. ராமநாதபுரம் - ஜே.கே. ரித்தீஷ்

விளம்பரப் புகழ் ரித்தீஷ். நடிகர். மாநில அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரன். வெயிட் பார்ட்டி என்பதாலேயே இவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

7. தஞ்சாவூர் - பழனி மாணிக்கம்

மத்திய அமைச்சராக இருந்து மீண்டு வாய்ப்பளிக்கப்பட்டவர்களுள் இவரும் ஒருவர்.

8. நாகப்பட்டிணம் - ஏ.கே.எஸ். விஜயன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் (அநேகமாக செல்வராஜ்) நிறுத்தப்படும் பட்சத்தில் கம்யூனிஸப் பாரம்பரியம் கொண்ட இவரைத் தவிர சிறந்த வேட்பாளரை அங்கே நிறுத்தமுடியாது என்பதால் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

9. கிருஷ்ணகிரி - சுகவனம்

மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள எம்.பிக்களுள் ஒருவர். பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவைத் தோற்கடித்தவர் என்பதைத் தவிர வேறு பெரிய அறிமுகம் ஏதும் இதுவரை ஏற்படவில்லை.

10. நீலகிரி - ஆ. ராசா

பெரம்பலூர் தொகுதி பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டுவிட்டதால் நீலகிரிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

11. திருப்பெரும்புதூர் - டி.ஆர். பாலு

கோட்டை கட்டி ஆண்ட தென்சென்னையை விட்டு(க்கொடுத்து)விட்டு திருப்பெரும்புதூருக்கு நகர்ந்திருக்கிறார்.

12. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

ஏற்கெனவே ஆர்.எம்.வீயின் எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் அரக்கோணத்தில் ஜெயித்திருக்கிறார். சமீபத்தில் திமுகவில் இணைந்த ஜெகத்துக்கு மீண்டும் அதே தொகுதி கிடைத்திருக்கிறது... என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

13. கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்

சர்ச்சைக்குரிய தொகுதி. எங்களுக்குக் கொடுத்தே தீரவேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் ஒற்றைகாலில் நின்று பார்த்தார். ம்ஹூம். எடுபடவில்லை. மகளிரணியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளித்துவிட்டது திமுக. இனிமேல்தான் அங்கே தேர்தல் தீபாவளி தொடங்கப்போகிறது.

14. பொள்ளாச்சி - சண்முக சுந்தரம்
15. தருமபுரி - தாமரைச்செல்வன்
16. நாமக்கல் - காந்திச்செல்வன்
17. தூத்துக்குடி - ஜெயதுரை

18. கள்ளக்குறிச்சி - ஆதி சங்கர்

விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ளார்.

19. திருவள்ளூர் - காயத்ரி ஸ்ரீதரன்

திமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டு பெண் வேட்பாளர்களுள் ஒருவர்.

20. கரூர் - கே.சி. பழனிச்சாமி

தொழிலதிபர். முன்னாள் மதிமுககாரர். தற்போதைய கருர் திமுக எம்.பி.

21. திருவண்ணாமலை - வேணுகோபால்

காடுவெட்டி குருவை எதிர்த்து நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்.திருப்பத்தூர் தொகுதி எம்.பி.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

1. காஞ்சீபுரம் (தனி)

2. ஆரணி

3. சேலம்

4. ஈரோடு

5. திருப்பூர்

6. கோவை

7. திண்டுக்கல்

8. திருச்சி

9. கடலூர்

10. மயிலாடுதுறை

11. சிவகங்கை

12. தேனி

13. விருதுநகர்

14. தென்காசி (தனி)

15. நெல்லை

16. புதுச்சேரி


சி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகள்


1. வடசென்னை
- தா.பாண்டியன்

2. நாகப்பட்டினம் (தனி) -

3. தென்காசி (தனி)
விடுதலை
சிறுத்தைகள் வேட்பாளர்கள்

1. விழுப்புரம் (தனி)-எஸ்.பி.வேலாயுதம்

2. சிதம்பரம் (தனி)-தொல்.திருமாவளவன்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி

1. வேலூர்

தொகுதி மறுசீரமைப்பு:
15வது மக்களவைக்காண தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. இதன் படி தமிழகத்தில் 13 தொகுதிகள் நீக்கப்பட்டு 13 புதிய தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகவே இருக்கும். தனி தொகுதிகளாக இருந்த சில தொகுதிகள் தற்போது பொது தொகுதியாகவும், பொது தொகுதியாக இருந்த சில தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட தொகுதிகள்:
செங்கல்பட்டு, திருப்பத்தூர், வந்தவாசி, திண்டிவனம், ராசிபுரம், திருச்செங்கோடு, கோபிசெட்டிபாளையம், பழனி, பெரியகுளம், புதுக்கோட்டை, சிவகாசி, திருச்செந்தூர், நாகர்கோவில்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள்:
திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், துஉத்துக்குட், கன்னியாகுமரி.


தனி தொகுதிகள்:
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி ஆகியவை தனி தொகுதிகளாகும், மற்றவை பொதுத் தொகுதிகளாகும்.

Monday, March 30, 2009

தமிழ் நாட்டில் தேசிய கட்சிகள்


காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி, இடது சாரி கட்சிகள் ஆகியவற்றின் தேர்தல் நிலைப்பாடு நமக்குத் தெரியும். இவை தவிர, மற்ற தேசிய கட்சிகளுக்கும் தமிழ் நாட்டில் கிளைகள் உள்ளன. அவற்றின் தேர்தல் நிலைப்பாடு தெரியவில்லை.

1. சமாஜ்வாடி கட்சி
2. ராஷ்ட்ரிய ஜனதா தளம்
3. லோக் ஜனசக்தி
4. சிவசேனா
5. இந்திய மக்கள் கட்சி
6. ஐக்கிய ஜனதா தளம்
7, மதச்சார்பற்ற ஜனதா தளம்
8. ராஷ்ட்ரிய லோக் தளம்

தமிழ் நாட்டில் ஐந்துமுனைப் போட்டி

மக்களவைத் தேர்தலில் இதுவரை வந்த தகவல்களின் படி, தமிழ் நாட்டில் ஐந்துமுனைப் போட்டி இருக்கும். அவை

1. தி.மு.க - காங்கிரஸ்- முஸ்லிம் லீக் - மனிதநேய மக்கள் கட்சி - விடுதலைச் சிறுத்தைகள்
2. அ.இ.அ.தி.மு.க-சி.பி.ஐ‍-‍ சி.பி.எம்-ம.தி.மு.க-பா.ம.க-தேசிய லீக்
3. தேசிய முற்போக்கு திராவிட கழகம்
4. பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி
5. பா.ஜ.க- சரத் குமார் கட்சி-கார்த்திக் கட்சி

இவை தவிர கொங்கு வேளாளர் சங்கம் 12 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், புதிய தமிழகம் 10 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் தெரிகிறது