என்னைப் பற்றி

My photo
நான் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படிக்கிறேன். விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவன்.இங்கு உள்ளவற்றை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள் .

Friday, August 28, 2009

பிரபாகரனின் மாவீரர் நாள் உரை -நிறைவேறும் நமது தமிழீழ கனவு-நவம்பர் 27 , 2008எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தைஇ ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசியநாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன்இபாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறது. எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளிகொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாளச் சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம்கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபடமுடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டிவந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்துவருகிறது. சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டுவருகிறது.

தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம். இந்த நோக்கத்தைச் செயற்படுத்திவிடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்துவருகிறது.

தனது முழுப் படைப்பலத்தையும் ஆயுதபலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்களத்தேசம் எமது மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்திவருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடிவருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இனஅழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

சிங்களத்தேசம் ஆக்கிரமித்து அடிமைகொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழவிரும்புகிறோம். ஆங்கிலேயக் காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிவருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டுவந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், சனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள்.

அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்கமுனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்கமுடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது. சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுசெய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர். அதேநேரம் நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை.

சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுக்களிற் பங்குபற்றிவந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்டபோதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவவழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம். போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினாலன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

உலக அரங்கிற் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை. புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறீலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்துபோன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்களத்தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது. எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்தன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டின் புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்புமீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தின் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம்கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப்பணிகளைப் பெரும் குற்றவியற்செயல்களாக அடையாளப்படுத்தின் தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒருபக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்;, பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்களத்தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

சிங்களத்தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர்தேசத்தின்மீது போர் தொடுத்தது. சர்வதேசத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலகநாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலைகூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கிவருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இனஅழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்துவருகிறது.

இன்று சிங்களத்தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவவழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது. தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ்த்; தமிழர்களை ஆட்சிபுரியவேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனாற் போர் தீவிரம்பெற்று, விரிவுபெற்று நிற்கிறது. இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போரன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழினத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இனஅழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது.

போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டுவருகிறது. பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையும் எறிகணைவீச்சுக்களையும் நடாத்திவருகிறது. சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது.

பிறப்பிலிருந்து இறப்புவரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது. எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்துவருகிறது. பெரும் அநீதிகளை இழைத்துவருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து இ எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்தச்சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறீலங்காப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமற்போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப்பகுதிகளில் தமிழர் காணாமற் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகிவிட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இனஅழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறைவைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல்போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சுவட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது. இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சிகொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிடமுடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள்.

அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம்கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கேயன்றி வேறெதற்காகவுமன்று. உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்திவருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்தமக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்துநிற்கிறோம். எம்மைத் தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கிஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்துவருகின்ற இந்தக் காலமாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்குமிடையே பகைமையை வளர்த்துவிட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச்சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்றபோதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்துநிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்துவிடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய்வடிவம் எடுத்துநிற்கிறது. அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர்வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்கமுடிகிறது. போரைக் கைவிட்டு, அமைதி வழியிற் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல்கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமரமக்கள் வரை போருக்கே குரல்கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டிநின்ற எம்மக்களிடம் சிங்களத்தேசந்தான் போரைத் திணித்திருக்கிறது. எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்கமறுத்து, அதனை ஏளனஞ்செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்களத்தேசந்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்களத்தேசந்தான்.

சிங்களத்தேசம் ஒரு பெரும் இனஅழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்திவருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றிவருகின்றன. வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்துக்கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. கடந்துசென்ற இந்த நீண்ட காலஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாகச் சிங்களத்தேசம் தனது படைக்கலச் சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலையவைத்திருக்கிறது. தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்கமறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்குத் தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது. புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்குத் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம்பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்கமறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது. சிங்களத்தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப்போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழத்தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையைத் திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Friday, August 21, 2009

தில்லாலங்கடி ராஜா-ரவி கைஸ்..சொந்தமாவே யோசிக்கத் தெரியாதா உங்களுக்கு..!ரீமேக்கே பொழப்புன்னு கடந்து சூப்பர் ஸ்டார் ஆகனும்னு நினச்சு 'குருவியா' பறந்தவரே இப்போ திருந்திட்டார்.இப்போ புதுசா கிளம்பியிருக்காங்க இன்னொருத்தவங்க.வேற யாரும் இல்ல நம்ம ஜெயம் ராஜா-ரவி கைஸ் தான் .
நம்ம ஹீரோ நடிச்சதுல நாலு படந்தான் ஹிட்டு.அதுவும் நம்ம டைரக்டர் ராஜா டைரக்ட் பண்ண படங்கள் தான்.(ஜெயம்,எம்.குமரன்,சம்திங் சம்திங்,சந்தோஷ் சுப்பிரமணியம்).இது நாலுமே தெலுங்குல வந்த பெரிய ஹிட்டான படங்களோட ரீமேக்கு.இல்ல இல்ல மார்பிங்(marphing),இந்த வோர்ட் தான் இதுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்.

இத்தனையும் வந்துடுச்சு.இனிமேவாச்சும் நம்ம டைரக்டர் சொந்த படம் எடுப்பார்னு ரசிகர்கள் நாங்க காத்திருந்தோம்.ஆனா சமீபத்துல வந்த விளம்பரத்த பார்த்த உடனே எனக்கு நம்ம டைரக்டர் மேல இருந்த நல்ல அபிமானம் போச்சு.
அது வேற ஒன்னும் இல்ல .இவங்களோட அடுத்த படத்தோட விளம்பரம்தான் .பேரு தில்லாலங்கடி.இவங்க செய்யற வேலைக்கு இது ரொம்ப பொருத்தாமான பேரு தான்.இந்த படம் சமீபத்துல தெலுங்குல வெளியான 'கிக்' அப்டிங்கற படத்தோட ரீமேக்கு.

ஏன் சார் அடுத்தவங்க கையையே நம்பி எறங்கனும்,நம்ம கதை மேல நமக்கே நம்பிக்கை இல்லைனா எப்படி..? தமிழன் கிட்ட இல்லாத திறமையா.இனிமேவாச்சும் தெலுங்கர்கள் கையை நம்புறத விட்டுட்டு சொந்த மூளைய கொஞ்சம் யோசிங்க..ரீமேக்க மட்டும் கைல வச்சிட்டு ரொம்ப நாள் ஓட்ட முடியாது.இப்பல்லாம் ஜனங்க எல்லா மொழி படத்தையும் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.திருந்துங்கப்பா..!

அடங்காத அரக்கன், பறித்தான் இரண்டாவது உயிரையும். விழிப்புணர்வே ஒரே மருந்து..


செ‌ன்னை‌யி‌ல் ப‌‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌லு‌க்கு மேலு‌ம் ஒருவ‌ர் ப‌லியா‌‌கியு‌ள்ளா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 2 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை ‌கிழ‌க்கு கட‌ற்கரை‌ சாலை‌யி‌ல் உ‌ள்ள ஈ‌ஞ்ச‌ம்பா‌க்க‌ம் கோபா‌ல் நகரை சே‌‌ர்‌ந்த பிரான்சிஸ் (49) என்பவர் கடந்த 19ஆ‌ம் தேதி பன்றி‌க் காய்ச்சல் அறிகு‌றிகளுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் பன்றி‌க் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

உப்பு சப்பு இல்லா இடைத் தேர்தல் முடிவுகள்.அதிர்ச்சி வேண்டாம் கீழே பார்க்க.


கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.போட்ட்யிட்ட தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி போட்டியிடாததால் தி.மு.க கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.வெற்றி முடிவுகள் பின்வருமாறு..

ஸ்ரீவைகுண்டம்-கடலையாண்டி(காங்கிரஸ்)-31000 வாக்குகள் வித்தியாசம்
கம்பம்-என்.ராமகிருஷ்ணன் (தி.மு.க)-33000 வாக்குகள் வித்தியாசம்
தொண்டாமுத்தூர்-கந்தசாமி(காங்கிரஸ்)-70000 வாக்குகள் வித்தியாசம்
பர்கூர்-நரசிம்மன்(தி.மு.க)-59000 வாக்குகள் வித்தியாசம்
இளையான்குடி-மதியரசன் (தி.மு.க)-41000 வாக்குகள் வித்தியாசம்

அ.தி.மு.க போட்டியிடாததால் அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று தே.மு.தி.க இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இந்த
தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்பதனால் உப்பு சப்பு இல்லாமல் முடிவுகள் வெளியானது.


Tuesday, August 11, 2009

மக்களின் உயிரைக் குடிக்க அலையும் பன்றிக் காய்ச்சல் அரக்கன்.தடுக்க சில வழிமுறைகள்


H1N1 எனும் வைரசே பன்றிக் காய்ச்சலை பரப்பும் .இந்த வைரஸ் முதன் முதலில் பன்றிகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதாகும் .இந்த நோய் ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சலை போன்றே ஒரு தோற்றத்தை கொடுக்கும்.இதனால் மக்கள் இதனை சாதாரண காய்ச்சல் என்றெண்ணி ஏமார்ந்து விடுகிறார்கள். . இது சாதாரணமாக காற்றிலேயே பரவக்கூடிய வைரசாகும்.ஒரு பகுதியில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டால் ,அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பரவக்கூடிய கொடிய தன்மையை இது பெற்றுள்ளது. முதலில் சிறு ஜலதோஷமாக உடலில் நுழையும் இக்கிருமி பின் படிப்படியாக அனைத்து உறுப்புகளையும் பாதிக்க்க ஆரம்பிக்கிறது.
இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை சென்னையில் சஞ்சய் என்ற 4 வயது சிறுவனின் உயிரை இக்கொடிய நோய் பறித்துக் கொண்டது .இன்று கூட ஒரு பெண் பன்றிக் காய்ச்சலால் இறந்து விட்டார் என்ற செய்தி நம் காதுகளை எட்டுகிறது. இவ்வாறாக பன்றிக் காய்ச்சலால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பன்றி
காய்ச்சலை கண்டறிவதற்கான சில அறிகுறிகள் இதோ ...
நாள்பட்ட சளி
அடிக்கடி வரும் காய்ச்சல் (100.4')
தீராத தலைவலி
மூச்சு திணறல்
உடலில் மற்றும் நகங்களில் தோன்றும் நீல நிறம்
வாந்தி மற்றும் பேதி
மார்பு பகுதியில் அழுத்தமான வலி
இவற்றில் ஏதேனும் சில அறிகுறிகள் உங்களுக்கு காணப்பட்டால் உடனே அருகில்லுள்ள மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளவும்.

பன்றிக் காச்சல் வராமல் தடுக்க சில பொதுவான அறிவுரைகள்
 1. அடிக்கடி உங்கள் கைகளை சோப்பினை உபயோகப்படுத்தி கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் .
 2. தினமும் 8 மணி நேரமாவது நிம்மதியாக உறங்குங்கள் .அது உங்கள் நோய் தடுப்பு திறனை அதிகப்படுத்தும்.
 3. நிறைய தண்ணீர் (சுத்தமான) பருகுங்கள் .
 4. உங்கள் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்த காய்கறிகளை நிறைய உட்கொள்ளுங்கள் .
 5. ஆல்கஹால் (மதுபானம்) உட்கொள்வதை
  தவிருங்கள்
 6. உடலின் ஆக்சிஜனை சீராக்க 30-40 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
 7. வைரஸ் நோய் உள்ளவர்களிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருங்கள்.
 8. தேவையில்லாத பயணங்களையும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளையும் தவிருங்கள் .
 9. காய்ச்சலோ அல்லது சளியோ ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
 10. கண்கள்,மூக்கு,வாயில் கை வைப்பதை தவிருங்கள்.கிருமிகள் இவ்வழியாக எளிதில் பரவக்கூடும்.

முக்கிய குறிப்பு :பன்றி காய்ச்சலை குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க படவில்லை.

Monday, August 10, 2009

இயந்திரத்தில் ஓட்டை.அதனால் தான் பறிபோனது பா.ம.க வின் கோட்டை. ராமதாஸ் இன்று செயல்முறை விளக்கம் .

------------------------------------->


மின்னணு
வாக்குப் பதிவு இயந்திரம் மீது கூறப்பட்டு வரும் புகாரை நிரூபிப்பதற்கான செயல் விளக்கத்தை பாமக சென்னையில் இன்று நடத்துகிறது. இதில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒன்றில் கூட வெற்றிபெற முடியவில்லை. இதைத் தொடர்ந்து பாமகவின் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய, அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மே 25-ல் சென்னையில் நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் காரணமாகவே பாமக தோற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே பொதுக்குழுவிலும், பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமென மாதிரி இயந்திரம் மூலம் பாமகவினர் செயல் விளக்கம் செய்து காட்டினர். இதற்கிடையே அதே குற்றச்சாட்டை காரணம் காட்டி, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டை தில்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வந்து நிரூபிக்குமாறு, அண்மையில் பாமகவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. சுதந்திரமான நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்தால், அக்குழு முன்னிலையில் நிரூபிக்க தயார் என பாமக பதிலளித்தது. இதற்கிடையே இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று, பாமக தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்தினார். மீண்டும் செயல் விளக்கம்: இந்த சூழலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்த செயல் விளக்கத்தை பாமகவினர் மீண்டும் சென்னையில் இன்று செய்து காட்டுகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இந்த செயல் விளக்கம் நடைபெறவுள்ளது. நீதிபதி டி.என். வள்ளிநாயகம், பி.எச். மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.), சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), எச். ராஜா (பா.ஜ.க.) உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌த்த சிறுவன் ப‌லி


ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌ல் மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட சென்னையை‌ச் சே‌ர்‌ந்த 4 வயது சிறுவன் இ‌ன்று அ‌திகாலை உ‌யி‌ரிழ‌ந்தா‌ன்.

சென்னை வேள‌ச்சே‌ரியை‌ச் சே‌ர்‌ந்த 4 வயது ‌சிறுவ‌ன் ச‌ஞ்ச‌ய்‌க்கு கட‌ந்த ஒரு வார‌த்‌தி‌ற்கு மு‌ன்பு து‌ம்ம‌ல், இரும‌ல் ஏ‌ற்ப‌ட்டது. கா‌ய்‌ச்சலு‌ம் அடி‌த்ததா‌ல் வடப‌ழ‌னி‌யி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌ ஒ‌ன்‌றி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌‌ன். இ‌ந்த ‌நிலை‌யி‌ல், அவனு‌க்கு பே‌தியு‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் ‌மிகவு‌ம் உட‌ல் தள‌ர்‌ந்து காண‌ப்ப‌ட்ட அவ‌னது ர‌த்த அணு‌க்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை குறை‌ந்தது. ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியேறுவது குறை‌ந்தது.

உடல‌்‌நிலை மேலு‌ம் மோசமானதா‌ல் சே‌த்து‌ப்ப‌ட்டி‌ல் உ‌ள்ள ம‌ற்றொரு த‌னியா‌ர் மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ச‌ஞ்ச‌ய், ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை ‌பி‌ரி‌வி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ன். இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் அவனது தொ‌ண்டை ச‌ளி ப‌ரிசோதனை‌யி‌ல் ப‌ன்‌றி‌க்‌ கா‌ய்‌ச்ச‌ல் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தது.

அவனது நாடி‌த்துடி‌ப்பு குறைவாக இரு‌ந்தது, மேலு‌ம் ‌சிறு‌‌நீரக‌ம் செய‌ல் இழ‌ந்‌திரு‌ந்தது. க‌ல்‌லீரலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தத. மூ‌ச்சு ‌விட‌த் ‌திண‌றிய ச‌ஞ்ச‌ய்‌க்கு செய‌ற்கை சுவாச‌ம் பொரு‌த்த‌ப்ப‌ட்டது. ர‌த்த அணு‌க்க‌‌ளி‌‌ன் எ‌ண்‌ணி‌க்கையு‌ம் குறைவாக இரு‌ந்தது.

உடனடியாக அவனு‌க்கு ப‌‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்சலு‌க்காக ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு நே‌ற்று அவனது உட‌ல்‌நிலை ச‌ற்று மு‌ன்னே‌ற்ற‌ம் அடை‌ந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல், இ‌ன்று காலை ‌சி‌கி‌ச்சை பல‌‌‌னி‌ன்‌றி ச‌ஞ்ச‌ய் உ‌யி‌ரிழ‌ந்தா‌ன்.

ச‌ஞ்ச‌யி‌ன் மரண‌த்தையு‌ம் சே‌ர்‌த்து இ‌ந்‌தியா‌வி‌ல் ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌த்து உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 5 ஆக உய‌‌ர்‌ந்து‌ள்ளது. கு‌றி‌ப்பாக த‌மிழக‌த்‌தி‌ல் ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌‌ல் நோ‌‌ய் பர‌வ‌லி‌ன் ‌தீ‌விர‌த்தையே ச‌ஞ்ச‌யி‌ன் மரண‌ம் கு‌றி‌ப்‌பிடு‌கிறது. இதனா‌ல் ப‌ள்‌ளி‌க்கு அனு‌ப்பு‌ம் ‌பி‌ள்ளைக‌ளி‌ன் பெ‌ற்றோ‌ர் பெரு‌ம் கவலை‌யி‌ல் ஆ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர்

Friday, August 7, 2009

தேசியத் தலைவரைக் காட்சிப்பொருளாக்கி பணம் சம்பாதிக்கும் சில இதழ்கள்
தமிழீழ தேசியத் தலைவர் தொலைகாட்சியை பார்ப்பதுபோலவும், அவர் புன்னகையுடன் தன்னைப்பற்றிய செய்திகளைப் பார்வையிடுவதாகவும், அச்சிட்டு தமிழ் நாட்டில் தமிழ் நாழிதள் ஒன்று வெளியிட்டுள்ளது.

திடுக்கிடும் இப்படங்களை வெளியிடுவதன் மூலம் அவர்களது புத்தகங்களை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். பணம் சம்பாதிக்க உன்னதமான விடுதலை வீரரை காட்சிப்பொருளாக பயன்படுத்துவதை எந்தத் தமிழனும் மன்னிக்கமாட்டார்கள்.

சில தொலக்காட்சிகள் குறுகிய நோக்கத்துடன் தமது தொலைக்காசியில் தேசிய தலைவர் உரையாற்ற இருப்பதாக குறுஞ்செய்திகளை(SMS) பரப்புகிறது, பிரபல நாழிதள்கள் தமது அட்டைப்படமாக தலைவர் படத்தை பிரசுரித்து பணம் சம்பாதிக்க முனைகிறது. கேவலம் பணத்தாசையால் தமிழின மானத்தை அதுவும் ஈழத் தமிழன் மானத்தை அடகுவைக்கிறார்கள் இவர்கள்.

பயத்தை விடு...!

இல்லை இலட்சியத்தை விட்டு விடு...!"

_தலைவன் பிரபாகரன்
போராட்டம் என்பது ஓரிருவர் சீறிப் பாய்வதல்ல,
மாறாக,
நாம் அனைவரும் சேர்ந்து ஓரடி முன் வைப்பதே!

-மாமேதை லெனின்.வாழ்க்கைச்செலவுமிக்க முதல் 10 நகரங்கள் - 2009

டோக்கியோ
1ம் இடம் டோக்கியோ நகரம் - ஜப்பான் (2008ல் 2ம் இடம்)
2ம் இடம் ஒசாகா நகரம் - ஜப்பான் (2008ல் 11ம் இடம்)
3ம் இடம் மொஸ்கோ நகரம் - ரஷ்யா (2008ல் 1ம் இடம்)
4ம் இடம் ஜெனிவா நகரம்-சுவிட்சர்லாந்து(2008ல் 8ம் இடம்)
5ம் இடம் கொங்கொங் நகரம்-கொங்கொங்(2008ல் 6ம் இடம்)
6ம் இடம் சூரிச் நகரம் - சுவிட்சர்லாந்து (2008ல் 9ம் இடம்)
7ம் இடம் கொபென்ஹகென் நகரம்-டென்மார்க் (2008ல் 7ம் இடம்)
8ம் இடம் நியூயோர்க் நகரம்-அமெரிக்கா(2008ல் 22ம் இடம்)
9ம் இடம் பீஜிங் நகரம் - சீனா (2008ல் 20ம் இடம்)
10ம் இடம் சிங்கப்பூர் நகரம் - சிங்கப்பூர் (2008ல் 13ம் இடம்)ஒவ்வொரு தமிழனும், ஒரு தீக்குச்சியாக இருப்போம்!காட்டாறாய் எழு ! அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி!!இந்திய
, இலங்கை அரசே...! உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...!

விடுதலை புலிகளின் புதிய இயக்கத் தலைவர் செல்வராசா பத்மநாபன் கைது


தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் அமைப்பின் புதிய தலைவராகவும் செயற்பட்ட கே . பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் இன்று பேங்கொக்கில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
ஆனால் செல்வராசா பத்மநாதன் தங்கள் நாட்டில் கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து பிரதமர் அப்சித் வெஜ்யஜிவா கூறியுள்ளார்.பன்னாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.''பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை என்று உறுதியாக கூறமுடியும். அவர் வேறு ஏதோவொரு நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கலாம்'' என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, மலேசியாவில் தான் பத்மநாதன் கைது செய்யப்பட்டார் என்று் சில இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனக்கு பிடித்த அறிவுமதி கவிதைகள் !!!


***

அகதி முகாம்
மழையில் வருகிறது

மண் மணம்.

***

அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.

***


மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.


***


விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.


***


தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.

***


இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

***

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

***

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

***


எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

***

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.

***


பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.

***


மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

***


வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!


***


எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!

***


நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.

***


நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.

***

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.


***


தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!


***


பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.

***


ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.

***


குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.

***


அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.

***


ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.

***


இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.

***


எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.

***


கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.

***


ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்

***


கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு

***


'இந்தியா டுடே'யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

***


இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்

***


உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.

ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது
- அறிவுமதி.

Thursday, August 6, 2009

தேர்தலைப் புறக்கணிக்க மின்னணு வாக்கு இயந்திரமே காரணம் : ஜெ!
தமிழக
சட்டப் பேரவைக்கு இம்மாதம் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது ஏற்பட்டுள்ள நம்பகத்தன்மை இன்மையே காரணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அண்மையில் அரசு சாரா அமைப்பு ஒன்று மின்னணு வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்யலாம் என்று நிரூபித்ததைச் சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, இது தேர்தல் ஆணையத்தின் கண்ணை மட்டுமல்ல, வாக்களிக்கும் மக்களின் கண்ணையும் திறக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை வாக்காளர்கள் அறிய முடியாதபட்சத்தில் ஜனநாயக நடவடிக்கை முழுவதுமே கேளிக்கூத்தானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை அடுத்து அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மின்னணு வாக்கு இயந்திரத்தின் செயல்பாட்டின் மீது கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். என்றாலும் இந்தியாவிலேயே முதன் முதலாக 2000ஆம் ஆண்டு முதல் வாக்கு இயந்திரத்தின் செயல்பாட்டில் தனது திருப்தியின்மையை ஜெயலலிதா வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது

மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய்


வழக்கறிஞர்களை அவமானப்படுத்திய வழக்கில் நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் படியான வசனங்களைப் பேசி விஜய் நடித்திருந்தார். இதனை எதிர்த்து நடிகர் விஜய் மீது வழக்கறிஞர்கள் புகார் அளித்திருந்தனர்.


இப்புகார் மனுவின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் விஜய் வழக்கறிஞர்களிடம் மன்னிப்பு கேட்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தன் மீதான 13 வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் அவர் மீது பதிவு செய்த வழக்குகளைத் திரும்பப் பெறுவார்கள் எனத் தெரிகிறது.