என்னைப் பற்றி

My photo
நான் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படிக்கிறேன். விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவன்.இங்கு உள்ளவற்றை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள் .

Saturday, September 5, 2009

இது எங்கள் போராட்டம்இது எங்கள் போராட்டம்
இதயத்தில் ஓர் மாற்றம்
உள்ளுக்குள் பூகம்பம் -இது
உதயத்தின் ஆரம்பம்

கதிரவனை கரம்பிடிக்க
உதிரங்கள் கொதிக்கிறது
சரித்திரம் கரைபுரள
சமுத்திரம் சுரக்கிறது

அரசியல் அடிஎடுக்க
ஆள்வதற்கு கொடிபிடிக்க
நரம்புகள் துடிக்கிறது-இங்கே
வரம்புகள் வெடிக்கிறது

இளமை இரத்தம் கொதிக்கிறது -இங்கு
இன்னொரு சூரியன் உதிக்கிறது
தமிழ்க்கொடி விண்ணில் பறக்கிறது-அதை
தடுக்க மண்ணே சிவக்கிறது

அகிலம் தோறும் கரம் பிடித்தால்
ஆண்டவனுக்கே படியளப்போம்
விளிம்பில்புரட்சி வெடித்துவிட்டால்
விடியல் இங்கே மலர்ந்து விடும்.

உனக்குள் ஓர் சுடர்வெளிச்சக்கீற்றில் விரிசல்கொண்டால் விடியல் இங்கேது -மெழுகு
உடலைஉருக்க அழுதுநின்றால் ஒளியும் கிடையாது
துன்பம் வந்தபோதும் உந்தன் துணிவை இழக்காதே
தொலைந்துபோன தோல்வியைஎண்ணி தினமும் வருந்தாதே

காற்றைப்போல் பாட்டுப்பாடி சுற்றி விளையாடு -நல்ல
காலம்சொல்லும் நேரம்பார்த்து வெற்றி நடைபோடு.
கடந்துவந்த பாதை தன்னை எண்ணி அசைபோடு
கவிதைநாயகி காலில் சலங்கை கட்டி இசைபாடு

துரத்திப்பார்க்கும் தோல்வி இனம்பிரித்துப் பார்ப்பதில்லை -நீ
துணிந்து நின்று எதிர்த்தால் அதுவும் நிலை போவதில்லை.
தூரம்என்ன நேரம்என்ன எதுவும் பார்க்காதே
ஞாயிறு திங்கள் விடுமுறை என்று பொழுதைப்போக்காதே

இரவில் சிரிக்கும் விண்மீன் கூட்டம் எண்ணக் கணக்கில்லை
இதுவரை எங்கள் புகழ் வரும் என்ற கணக்கும் உனக்கில்லை
சிலிர்க்க வைக்கும் சிந்தனைச் சுடர்கள் உனக்குள் இருக்குதடா
சில்லறை தொலைந்து போனதை எண்ணி எதற்கு வருத்தம்டா!