என்னைப் பற்றி

My photo
நான் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் படிக்கிறேன். விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தவன்.இங்கு உள்ளவற்றை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள் .

Monday, December 20, 2010

இலவசங்கள் என்னும் இழிவும்-கொள்ளையும்!


தமிழ்நாட்டில் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இந்தியாவில் மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.

வேலையில்லாத் திண்டாட்டத் திலும் அறியாமையிலும் இந்தியா உலகத் தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிட சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வரு மானம் பெறுகின்றன. சப்பானில் 23,800 டாலர், சிங்கப்பூரில் 10,450 டாலர், தைவானில் 8,500 டாலர், மலேசியாவில் 2,160 டாலர் ஆனால் இந்தியாவில் வெறும் 340 டாலர் மட்டுமே. இயற்கை வளத்திலும் மனித எண்ணிக்கையிலும் இந்தியாவைவிட மிகச்சிறிய இந்த நாடுகள் எங்ஙனம் பொருளாதாரத்தில் நம்மைவிட வலிமை வாய்ந்த நாடுகளாக மாறின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மக்களின் வறுமையையும் அறியாமையையும் போக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிற பொறுப்பு அரசைச் சார்ந்தது. சனநாயக நாட்டில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதும் சுய சார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அரசின் முக்கியக் கடமைக ளாகும். கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய பெருங்கடமை அரசைச் சார்ந்ததாகும். தனிநபர்களின் வருமானத் தைப் பெருக்குவதற்கான வழிவகை களை அரசு செய்தால் அவரவர்களின் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அரசோ இலவசம் என்ற பெய ரில் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச் சைக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டி ருக்கிறது.

இலவசச் சேலை, வேட்டி, இலவசச் சீருடை, இலவசப் பாடப்புத்தகம், இலவச சைக்கிள், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசைகளைக் கான்கிரீட் வீடு களாக மாற்றும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இலவசங்களை வாரி வாரி வழங்குவதில் தமிழக அரசு முனைந்திருக்கிறது. இத்தகைய இலவசங் களால் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும் இலவசத்தின் பின்னணியில் கிடைக்கும் ஆதாயம் என்ன? - என் பதை ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகளை நாம் உணர்வோம்.

கல்வி

காமராசர் ஆட்சிக் காலத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக கல்லூரிக் கல்வி வரை இதை நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.

ஆனால் இப்போது குற்றப் பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் சட்டத்திற்குட்பட்ட நூதன கொள்ளைத் தொழிலாக கல்வி மாற்றப்பட்டுவிட்டது. நல்ல குடிமக்களை உருவாக்கும் கல்வி நிலையங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டன. அரசு நடத்தும் பள்ளிகளில் சுமார் 90 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி யிருப்பது கிராமப்புற பள்ளிகளே ஆகும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படா மல் உள்ளன. அரசு நடத்தும் 69 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி களில் 42 கல்லூரிகளில் முதல்வர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.

பிறமாநிலங்களில் மெட்ரிக் குலேசன் பள்ளிகள் என்பதே கிடையாது. 1967ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலோ-இந்திய குழந்தைகளுக்காக 3 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு 1978ஆம் ஆண்டு வரை இப்பள்ளிகளின் எண்ணிக்கை 34 ஆக மட்டுமே உயர்ந்தன. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கு மேற் பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.

400க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள் ளன. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாண வர்கள் இவற்றில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்ட மைப்புகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை.

புற்றீசல் போல தனியார் பள்ளி களும், பொறியியல் மற்றும் கல்லூரி களும் பெருகக் காரணம் என்ன? குறிப் பிட்ட கையூட்டு கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது என்பது ஊரறிந்த இரகசியமாகும். இதன் விளைவாக மத்திய அரசினால் அங்கீகாரம் நீக்கப் பட்ட 44 பல்கலைக் கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது வெட்ககரமான உண்மையாகும்.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகள், கல்லூரி கள் ஆகியவற்றிலும் போதுமான ஆசிரி யர்கள் நியமிக்கப்படாமலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமலும், மாணவர் களின் கல்வி சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்த முக்கியப் பிரச்சினை குறித்து அரசுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.

விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்

1972ஆம் ஆண்டில் மின்கட்ட ணத்தில் யூனிட்டுக்கு அரை பைசா குறைக்கும்படி போராடிய விவசாயிகளின் மீது கடும் அடக்குமுறையை கருணாநிதி அரசு ஏவிவிட்டது. 21 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்குப் பிறகு கருணாநிதி மீண்டும் பதவிக்கு 1990ஆம் ஆண்டில் வந்தார். வந்தவுடன் விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற் காக அவர்களே கேட்காத சலுகையை அளித்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்தினார். 5 ஏக்கருக்கு உட் பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல பெரும் விவசாயிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இலவச மின் திட்டம் வந்தபிறகு புதிய பம்புசெட்டு களுக்கு மின்இணைப்பு கொடுப்பதையே அரசு நிறுத்திவிட்டது. இதன் விளை வாக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவது தான் உண்மையில் அவர்களுக்கு உதவுவதாகும். ஆனால் ஒரு நாளில் சில மணி நேரங்கள் கூட அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிற்று. இந்த அழகில் சிறு, குறு விவசாயிகளுக்கு 14 இலட்சத்து 67ஆயிரம் மின்மோட்டார்களை வழங்கப் போவதாகவும் இந்த ஆண்டில் 2 இலட்சம் மின் மோட்டார்கள் வழங்கப் படும் எனவும் தி.மு.க. அரசு அறிவித் துள்ளது.

இலவச மின்மோட்டார்கள் அளித்து என்ன பயன்? அவ்வளவுக்கும் மின்இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரம் அளிக்காமல் மின் மோட்டார்களை கொடுப்பது ஏமாற்றுவேலையாகும்.

மின்மோட்டார்களை வாங்குவதற் காக அரசு அறிவித்துள்ள டெண்டர் நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பம்பு மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளைப் பகுதிவாரியாகப் பிரித்து 500 பம்புசெட்டு கள் வீதம் டெண்டர் விடவேண்டும். இதன் மூலம் பல உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மின்மோட்டார்களை வாங்குவதற்கு யாரோ சில உற்பத்தியாளர்களிடம் பேரம்பேசி உரிய கமிசனைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இதை பகிர்ந்தளிக்கவேண்டு மென்று உற்பத்தியாளர்கள் சங்கம் வற்புறுத்தியிருக்கிறது.

இலவச தொலைக்காட்சிப்பெட்டித் திட்டம்

தமிழ்நாட்டில் 2 கோடியே 80 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் வீடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒரு கோடியே 40 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் அரசினால் இலவசமாக வழங்கப்பட்டவையாகும். இவ்வளவு பெருந்தொகையான தொலைக்காட்சிப்பெட்டிகள் வாங்கப் பட்டதில் பெறப்பட்ட கமிசன் எவ்வளவு?

சுமார் 2500 ரூபாய் பெறுமான தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் கொடுத்தால் பெறுபவர்களுக்கு பய னில்லை. அவர்கள் அதற்கு கேபிள் இணைப்புப் பெற்றால்தான் விரும்பிய வற்றைப் பார்க்க முடியும். அரசு கேபிள் நிறுவனம் மூலம் இலவசமாக இணைப்பு கொடுக்கலாம். ஆனால் அரசு நிறுவனத் தைச் செயல்படவிடாமல் முடக்கி விட்டார்கள்.

ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புப் பெற மாதம் ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணம் கட்டியாக வேண்டும். அரசு கொடுத்துள்ள இலவசத் தொலைக்காட்சிகளின் மூலம் மாதந்தோறும் சுமார் 250 கோடி ரூபாய் கேபிள் நிறுவனங்களுக்கு வசூலாகிறது. ஆண்டிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகிறது. இந்தப் பணம் முதலமைச்சரின் பேரன்கள் நடத்தும் சுமங்கலி, இராயல் கேபிள் நிறுவனங் களுக்கு போகிறது. மக்கள் வரிப் பணத்தில் ரூ.750 கோடிக்கு தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி இலவச மாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொடுத்து அதன்மூலம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைவது முதலமைச்சரின் குடும்ப மாகும். இதைவிடப் பன்படங்கு அதிக மான தொகை விளம்பரத்தின் மூலம் கிடைக்கிறது.

இலவச கேஸ் அடுப்பு

11 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த ஆண்டில் 220 கோடி ரூபாய் செல வில் இலவசக் கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இதற்குரிய கேஸ் சிலிண்டர்கள் போதுமான அளவுக்கு கிடைக்காமல் ஏற்கனவே உள்ள பயனாளிகளும் இதனால் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். திட்டமிடுவதைச் சரியாகச் செய்யாததால் ஏற்பட்ட விளைவு இதுவாகும்.

இலவச மருத்துவக் காப்பீடு

தமிழக அரசின் இந்தத் திட்டத் திற்கு கடந்த ஆண்டு ரூ.501 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அரசு மருத்து வமனைகள் உள்ளன. இவற்றில் பல மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரி களோடு இணைந்த பெரிய மருத்துவ மனைகளாகும். ஆனால் தனிப்பட்ட மருத்துவமனைகளையே மக்கள் பயன் படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் கள். இந்த தனியார் மருத்துவமனை களுக்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.415.43 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசு மருத்துவமனைகளுக்கு கிடைத்திருந்தால் அவைகள் மேலும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக்கொண் டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அரசு விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுப்பதின் மூலம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். அரசு மருத்துவமனைகளி

லிருந்து அது கிடைக்காது.

கடந்த ஆண்டு 1.53 இலட்சம் பேர் இந்த இலவச மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் விளைவாக பயன் பெற்றிருக்கிறார்கள். அரசு மருத்துவ மனைகளில் இவர்களுக்குச் சிகிச்சை தர எல்லாவிதமான வசதிகள் இருந்தும். அவைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கையாளும் முறையில் திருப்தியில்லை என மக்களும் கருதுகிறார்கள்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

ஊரகப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வகுத்த திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- ஊதியம் விகிதம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிப் பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விவசாய வேலைகள் இல்லாத காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இத்திட் டத்தை செயல்படுத்த வேண்டும். ஏரி, குளம், தூர் எடுத்தல், வாய்க்கால் புதுப்பித்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கு அடிப்படை உணவுக்காகவாவது ஊதி யம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட் டத்தின் நோக்கமாகும். ஆனால் விவ சாய வேலைகள் இருக்கும் காலத்திலும் ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றைத் தூர் எடுப்பது, சாலைகள் செப்பனிடுவது போன்றவற்றைச் செய்வதுபோன்ற பாவனைகாட்டி இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. வேலை செய்த ஏழை களுக்கு ரூ.60 முதல் 80 வரை கொடுக் கப்படுகிறது. மீதம் ரூபாய் 40 முதல் 20 வரை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். சில இடங்களில் வேலையே செய்யாமல் இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. இதன் விளைவாக மக்களின் வரிப்பணம் சூறை யாடப்படுவது மட்டுமல்ல. விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயமும் கெட்டுப்போகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

சிறப்புப் பொருளாதார மண்டலங் கள் என்ற பெயரில் விவசாயம் அல்லாத பணிகளுக்கு விளை நிலங்கள் எடுக்கப் படுகின்றன. 2005ஆம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மண்டலத்தில் தொடங்கப்படும் தொழில் களுக்கு இறக்குமதி ஏற்றுமதி சுங்கத் தீர்வைகளிலிருந்து விலக்கு, கலால் வரியி லிருந்து விலக்கு, விற்பனைவரியிலிருந்து விலக்கு, ஈட்டும் லாபத்தின் மீது 15 ஆண்டுகளுக்கு வரிகிடையாது என்பது போன்ற சலுகைகள் வாரி வழங்கப்படு கின்றன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவ னங்கள் இந்த சிறப்புப் பொருளாதார நிறுவனங்களை அமைத்து அதில் உள்ள இடங்களைத் தொழில் நிறுவனங் களுக்கு விற்கலாம்; குத்தகைக்குக் கொடுக்கலாம், அதுமட்டுமல்ல, இந்த மண்டலத்தில் தொழிற்கூடங்களோடு குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட சிறு நகரங்களை அமைத்துக்கொள்ளலாம்.

விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் அரசினால் பறித்தெடுக்கப் படுகிற விளைநிலங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. பிற்காலத்தில் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் விற்பனைசெய்யலாம் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தனியாரைக் கொழுக்கச் செய்வதற்காக விவசாயி களை வயிற்றில் அடிக்கும் வேலையை அரசு செய்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனுமதிப்பிற்கான பரிசீலனையில் உள்ளன. இவ்வளவு மண்டலங்களுக்கும் தேவையான பல இலட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த ஆரம் பித்தால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். உணவு உற்பத்தி குறையும், விவசாயிகள் வாழையடி வாழையாக வாழ்ந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப் படுவார்கள்.

தமிழகத்தில் விவசாயம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 1994-1995ஆம் ஆண்டில் 57.6 இலட்சம் ஹெக்டேராக விளைநிலங்களின் பரப்பளவு தமிழகத் தில் இருந்தது. ஆனால் 10 ஆண்டு களில் அதாவது 2005-2006இல் 50.6 இலட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. 7 இலட்சம் ஹெக்டேர் அதாவது 17.5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள விளை நிலம் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிவகங்கை, இராம நாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி போன்ற மிகவும் பின்தங்கிய வறண்ட மாவட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத் தால் அந்த மாவட்டங்களும் மக்களும் வளர்ச்சியடைவார்கள். அந்த மாவட்டங் களில் பெரும்பாலும் தரிசு நிலங்கள்தான் அதிகம். ஆனால் தொழிலதிபர்கள் அங்கு தொழில்நடத்த விரும்பவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் தங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்க விரும்பு கிறார்கள். அதற்குத் தமிழக அரசு ஒத்துழைக்கிறது.

எடுத்துக்காட்டாக கடலூரில் இருந்து வேதாரண்யம் வரையில் 8 அனல் மின்நிலையங்களை அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதற் காக இந்தப் பகுதியில் கடற்கரை யோரத்தில் பல்லாயிரம் ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்களின் தேவைக்கு அதிக மாக பன்மடங்கு நிலங்கள் விவசாயி களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்கள் அமைக்கப் பட்டதுபோக மீதமுள்ள நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுத் தனியார் நிறுவனங்கள் பெரும் கொள்ளையடிக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

மது மயக்கம்

1967ஆம் ஆண்டுக்கு முன் முழு மையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்த தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி யில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன் விளைவாக 3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போனார்கள்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாழும் பதின்வயது மாண வர்களில் 3ல் ஒரு பங்கினர். பள்ளிப் பருவத்திலேயே மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதாகவும், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தி னர் மதுகுடிப்பதாகவும் தெரியவந் துள்ளது. ஒவ்வொரு மாணவரும் மதுகுடிப்பதற்காக ஆண்டுக்கு 3,500

லிருந்து 4,500 வரை செலவழிப்பதாகவும் தெரியவந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான தங்கள் கணவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மையங் களுக்கு அழைத்துச் சென்ற பெண்கள் இப்போது தங்களுடைய பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வருகிற கொடுமையும் நடைபெறுகிறது.

கிராமப்பகுதிகளிலும் மதுக்கலாச் சாரம் வேகமாகப் பரவிவருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியுடன் சேர்த்து குவார்ட்டர் கொடுக்கும் பழக்கம் பல பகுதிகளில் உருவாகி யுள்ளது. தமிழக அரசு திறந்துள்ள 6000க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடை களின் மூலம் ஆண்டிற்கு 14,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் மது உற்பத்திச் சாலைகளின் மூலம் ஆண்டுக்கு 36,000 கோடி

லிட்டர் மது உற்பத்திசெய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளியன்று மட்டும் மது விற்பனை ரூ.90 கோடி யாகவும், அந்த வாரத்தில் ரூபாய் 400 கோடி விற்பனையானதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

அரசுக்கு மது விற்பனை மூலம் ஆண்டிற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கலாம். அரசின் மொத்த வருவாயில் இது 25சதவீதம் ஆகவும் இருக்கலாம். இந்தப் பணம் யாரிடமிருந்து கிடைக்கிறது? மக்களின் மடியிலிருந்து இந்தப் பணம் திருடப்படுகிறது. குடிப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் தங்கள் ஊதியத்தின் பெரும் பகுதியை குடிப்ப தற்காகச் செலவழிக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய குடும்பங் கள் பட்டினியாலும் வறுமையாலும் வாடுகின்றன. இன்னும் பலவகைகளிலும் குடிப்பழக்கம் சமூகத்தைச் சீரழிக்கிறது. ஏராளமான தற்கொலைகளுக்கு இதுவே காரணமாக அமைகிறது. எய்ட்ஸ் நோய், காசநோய், மாரடைப்பு ஆகியவற்றுக்கும் மதுவுக்கும் நிறையத் தொடர்புண்டு, சாலை விபத்து சாவுகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடும்ப சச்சரவுகளுக்கும் சிலவேளைகளில் கொலைகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடிப்பழக்கத் தால் வேலை இழப்பு, உற்பத்திப் பாதிப்பு, உயிரிழப்பு, பொருள் இழப்பு மூலம் ஏற்படும் நட்டம் அதிகம். மொத்தத்தில் சமூக அமைதியை மது கெடுக்கிறது.

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் இலவசங்களை தமிழக அரசு வாரித் தருகிறது. ஆனால் அதே வேளையில் மக்கள் மடியிலிருக் கிற பணத்தை அரசு சூறையாடுகிறது என்பதுதான் உண்மையாகும்.

சுமங்கலித் திட்டம்

திருமணமாகாத இளம் பெண் களுக்கு உதவி செய்வதற்காக வகுக்கப் பட்ட திட்டம்தான் சுமங்கலித் திட்ட மாகும். தொழிற்சாலைகளில் 3 ஆண்டு கள் இந்தப் பெண்கள் தொடர்ந்து வேலைசெய்யவேண்டும். முடிவில் இவர் களுக்கு ஒரு பெருந்தொகை அளிக்கப் படும். இவர்களின் திருமணத்திற்கு அது உதவும் எனக் கவர்ச்சிகரமான திட்டமாக இது வர்ணிக்கப்பட்டது.

ஆனால் நடைமுறை என்ன? கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் இளம்பெண்களுக்கு ஒரு நாளைக்கு 30 அல்லது ரூ.20 ஊதியமாகத் தரப்படும். சாப்பாடு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு ரூ.10 கழித்துக்கொள்ளப்படும். 3 வருடங்களில் 1 நாள் விடுமுறை எடுத்தால்கூட இவர் கள் கூடுதலாக ஒரு மாதம் உழைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, 3ஆம் ஆண்டின் முடிவில் பொய்யான குற்றச் சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை அளிக்காமல் விரட்டியடிக்கப்படுகிற கொடுமையும் நடைபெறுகிறது. தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் பெண்கள் பாலியல் துன் பங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைக் குறித்து புகார் செய்தாலும் அவர்கள் வேலைபறிபோகும். எனவே கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வேலைபார்க்க வேண்டிய சூழ்நிலை.

வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

2002ஆம் ஆண்டு முதல் தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மழை, வெள்ளம், வறட்சி போன்ற பல்வேறு காரணங்களி னால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயி களுக்கு நட்டஈடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதில் 50 சதவிகிதம் மத்திய அரசு அளிக்கிறது.

ஆனால் நடைமுறையில் இத்திட் டத்தினால் பயன்பெறும் விவசாயிகள் மிகமிகக் குறைவாகும். இத்திட்டம் வட் டம், குறுவட்டம் அளவில் செயல்படுத் தப்படுகிறது. ஒரு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயற்கை உற்பாதத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் அந்த வட்டத்தில் உள்ள பிற கிராமங்களில் பாதிப்பில்லை என்று சொன்னால் அவருக்கு இழப்பீடு கிடைக்காது. எனவே வட்டம், குறுவட்டம் என்ற அளவில் இத்திட்டம் செயற்படுத்தப் படுவதற்குப் பதில் கிராம அளவில் செயற்படுத்தப்பட்டால் ஒழிய இத்திட் டத்தினால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் விரைவாக வளர்ச்சி பெற்றுவரும் மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்தி தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. ஆட்சியினர் இலவசங்களை வாரி வழங்கிவருவது பெரும் முரண்பாடு அல்லவா? விரைவாக வளர்ச்சிபெற்று வரும் மாநிலம் என்று சொன்னால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்துதானே வந்திருக்க வேண்டும். ஆனால் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கும் வகையில் இலவசங்களைத் தருவது எதற்காக?

பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ கத்தில் பல தொழில்களைத் தொடங்கி நமது வளங்களையும் நமது தொழிலாளர் களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி யைத் தமிழகத்தின் வளர்ச்சியாக ஆட்சியாளர்கள் சுட்டிக்காட்டுவது - மக்களை மேலும் மேலும் வறியவர்களாக ஆக்கி வருகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

இலவசத் திட்டங்களின் விளை வாக மக்கள் சோம்பேறிகளாவதோடு உழைத்து உண்ணவேண்டும் என்கிற எண்ணத்தையே மறக்க ஆரம்பித்தி ருக்கிறார்கள். இதன் விளைவாக பொது ஒழுக்கமும் சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து வருகின்றன.

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வ தற்காக இலவசங்களை அள்ளித் தெளித்திருக்கிறது அரசு. இதனால் மக்களில் ஒருபகுதியினர் பயன்பெற்றி ருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அரசின் நிதிநிலைமை சீர்கேடடைந் திருக்கிறது. வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.1,00,876 கோடி யாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

தொலைநோக்குத் திட்டங் களுக்கு முன்னுரிமை வழங்கி அதனடிப் படையில் சிலவற்றை இலவசமாக வழங்குவதுதான் சிறப்பானதாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாகவும் கடமையாக வும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை இலவசங்களின் மூலம் தி.மு.க. அரசு திசைதிருப்பவும் முடக்கவும் முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களைப் பயன்படுத்துவது காலப்போக்கில் நாட்டை மீளமுடியாத படுகுழியில் தள்ளி விடும். மக்களின் வளர்ச்சிக்காக அரசுத் திட்டங்கள் அமையவேண்டுமே தவிர, அரசைக் காப்பாற்றிக்கொள் வதற்காக அமையக்கூடாது. மக்களின் நீண்ட காலத் தேவைகளை பூர்த்தி செய் கிற வகையில் திட்டங்கள் தீட்டப் படுவது இல்லை. மக்களை எப்போதும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வைத்திருந்து அவ்வப்போது வாய்க்கரிசி போடுவது போல இலவசங்களை அளிப்பதன் மூலம் மட்டுமே தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்று தி.மு.க. அரசு கருதுகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் மக்களின் நீண்ட காலத் தேவைகளை அரசு நிறை வேற்றினால் அவர்கள் சுய சார்பு உள்ளவர்களாக மாறி சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்துவிட்டால் அது தனக்கு அபாயத்தை விளைவிக்கும் என அரசு கருதுகிறது. விழிப்புணர்வு மிக்க மக்கள் எங்களுக்கு இலவசமே தேவையில்லை எனத் தன்மானத்துடன் கூறிவிடுவார்கள் என அரசு அஞ்சுகிறது.

எதற்கெடுத்தாலும் தன்மானம் பற்றிப் பேசி வருகிற தமிழக முதலமைச் சர் மக்களின் தன்மானம் பற்றி கொஞ்ச மும் கவலைப்படவில்லை. பழைய கால மன்னாதி மன்னனாகத் தன்னைக் கருதிக்கொண்டு மக்களுக்கு இலவசங் களை வாரிக்கொடுப்பதின் மூலம் அவர் களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத் துக்கொள்ளமுடியும் என நம்புகிறார்.

இலவசம் என்ற பெயரில் வகுக் கப்படும் திட்டங்களுக்கு பின்னணியில் ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படும் இரகசிய பரிமாற்றங்களின் விளைவாக தரமற்ற பொருட்களை உற் பத்தி செய்து தனியார் நிறுவனங்கள் மக்கள் தலையில் கட்டுகின்றன. எடுத் துக்காட்டாக தொலைக்காட்சிப்பெட்டி, மிதிவண்டி, கேஸ் அடுப்பு, வேட்டி, சேலை போன்றவை என்ன தரத்தில் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.

இலவசமாகப் பெறும் பொருட்கள் மனித மாண்பை சீர்குலைக்கின்றன. தங்களுடைய உடல் உழைப்பால் சம்பாதித்து முன்னேறவும் சொந்தக் காலில் நிற்கவும் விரும்புபவர்கள்தான் தங்களின் தன்மானத்தை காப்பாற்றிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் தன்மானத்தை மட்டுமல்ல அடிப்படை மாண்பையே இழந்து விடுகிறார்கள். இலவசத்தால் மக்களுக்கு இத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால ஆதாயங்கள் கிடைக்கின்றன.

ஒருவனுக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன்பிடிக் கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்ற ஆங்கிலேயப் பழமொழியை பின்பற்றுவதுதான் சிறந்த அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியும்.

நன்றி: பழ.நெடுமாறன். தினமணி 8-12-10

Thursday, December 16, 2010

நீரா ராடியா டேப்களின் தொகுப்பு உரை


  மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும்
  எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப்
  புரியவைக்கின்றன. . இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி
  முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை உள்துறை
  அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது
  உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை.

  இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள்தான் என்ன ?

  1. கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ) . இனிமேல் தானும்
  ஸ்டாலினும்தான் கட்சியை நடத்திச் செல்லப் போகிறோம். காங்கிரசார் எதுவானாலும்
  இனி என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப்பாட்டில்தான்
  இருப்பார் என்றெல்லாம் தயாநிதி மாறன் டெல்லியில் சொல்லுவதாக நீரா ராடியா
  ஆ.ராசாவிடம் சொல்லுகிறார்.

  2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்று காங்கிரசார் மனதில் கருத வைத்தது
  யாரென்று தனக்குத் தெரியும் என்று ராசா சொன்னதற்குத்தான் மேற்படி பதில்.

  3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை
  என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள்
  என்கிறார் நீரா.

  4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட்டேன். அவர் தலைவரிடம் போய்
  சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

  5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்சினை. ராசாவிடம் இல்லை என்று சோனியா
  காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் போனில் சொல்ல வைக்கும்படி ராசா நீராவைக்
  கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்லுகிறார்.
  பாலுதான் பிரச்சினை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம்
  கொடுக்கச் சொல்கிறார் ராசா.

  6. தன்னைத்தான் தி.மு.க சார்பில் டெல்லியில் காங்கிரசாருடன் பேசும்படி
  கருணாநிதி தனியே சொல்லியனுப்பியிருப்பதாக தயாநிதி மாறன் டெல்லியில்
  சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

  7. தயாநிதி பொய் சொல்லுவதாகவும் பொய்களைப் ப்ரப்புவதாகவும் கனிமொழி நீராவிடம்
  சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.விகாரர்கள் இதர வட இந்திய சேனல்கள்
  எல்லாரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தன்னிடம்
  சி.என்.என்.ஐ.பி.என் சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

  8. தயாநிதி பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதாக நீரா கனிமொழியிடம்
  சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாக கனிமொழி சொல்கிறார்.
  ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால்
  கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை
  விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டியதுதானே என்று
  நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக்
  கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம்
  பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

  9.தனக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி
  கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச்
  சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

  10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி
  துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும்
  ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல்
  சொல்கிறார் நீரா.

  11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்கு
  சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட்
  உத்தரவினால் அப்படி என்று தன்னிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப்
  பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான்
  இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்டதாகவும் நீரா தெரிவிக்கிறார்.

  12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப்
  பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்கு சாலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான்
  முக்கியம். அவரைப் பார்க்க்ப்போகிறேன். அவ்ருக்கு அனில் அம்பானியை துளியும்
  பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா
  பதிலளிக்கிறார்.

  13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல்
  இருக்கிறது என்று டாட்டா நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது
  நெகடிவாக எழுதினால் உடனே விளம்பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப்
  இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதை
  செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேராசைப்படுகிறது என்று
  விளக்குகிறார் நீரா.

  14. என்.டி. டி.வியின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ்
  -தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தான்
  காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தான்
  அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இருவருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ்
  தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு
  இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.


  15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குநர் வீர் சங்வியும் நீராவும்
  பேசுகிறார்கள். சங்வி தான் தொடர்ந்து சோனியாவையும் ராகுலையும் சந்தித்து
  வருவதாக சொல்கிறார். அமைச்சர் துறைப் பங்கீட்டுப் பிரச்சினை காங்கிரஸ்-தி.மு.க
  பிரச்சினை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு
  சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது.
  கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தன் சார்பில் என்று ஒரே
  ஒருவரை தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி குலாம் நபி ஆசாதை
  அடிக்கடிக் கூப்பிட்டு நான் தான் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக்
  கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர்
  சிங்வி சொல்கிறார்.

  16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்க பெரும் நிர்ப்பந்தம்
  இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம் ? தயாநிதி கருணாநிதியின் மனைவி
  தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும்
  செல்வியும் நிர்பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.


  படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது….. மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான்.
  முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை,
  நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம்,எரிச்சல், எப்படியாவது

காரியத்தை முடித்துவிடவேண்டுமென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில்
தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம்,
மமதை,எல்லாம் தன் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைகளையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு
அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது யார் ? பிரதமரா? தொழிலதிபர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன்மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தனக்கு வேண்டுமென்று அலைகிறார்கள் ?
தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே ! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் ?
கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியாகாரர்கள்
அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை
பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம்
ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன்,
மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை
கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்
என்பதால்தான்.

*கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்க
தெருத்தெருவாக இனி வருவார்கள் ?
பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில்
ஒரு துளியை கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள்
நம்புவதனால்தான்.*

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க ? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

Tuesday, November 2, 2010

கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா?அடடா இதுவல்ல அரசாங்கம்.


ஓர் அரசின் அடிப்படைக் கடமை மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பது, போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதும் மட்டுமல்ல, சராசரிக் குடிமகனின் அன்றாட வாழ்க்கை நிம்மதியாகக் கழிவதற்கும், அவரவர் தத்தம் வேலைகளை எந்தவிதத் தடையோ, இடையூறோ இல்லாமல் தொடர்வதற்கு வழிகோலுவதும்தான்.

பெருகிவிட்ட மதுபானக் கடைகளும், தெருவுக்குத் தெரு, வட்டத்துக்கு வட்டம், பகுதிக்குப் பகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தும் அரசியல் கட்சிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூக விரோதக் கும்பல்களும், சராசரிக் குடிமகனின் அடிப்படைப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கின்றன.

சென்னையில் மட்டுமே ஆரம்பத்தில் காணப்பட்ட "கட்டைப் பஞ்சாயத்து' தாதாக்கள் இன்று தமிழகத்தின் சிறு நகரங்களில்கூடக் காளான்களாகப் பெருகிவிட்டிருக்கின்றனர். தெருவில் மணலும் செங்கல்லும் வந்து இறங்கினால் "மாமூல்' வசூலிக்க வார்டு உறுப்பினரிலிருந்து, தாதா கும்பல்வரை நடத்தும் அடாவடி மிரட்டல்களும், அத்துமீறல்களும், சட்டம் செயலிழந்துவிட்டதைத்தானே எடுத்துரைக்கிறது.

அதையெல்லாம்கூட சகித்துக் கொள்ளலாம். தைரியமாகப் பெண்கள் நடமாட முடியவில்லை, வயதானவர்கள் தனியாக வாழ முடியவில்லை, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏற்பட்டால் அதையும், ஆட்சியாளர்களைத் தவறாகத் தேர்ந்தெடுத்தற்காகத் தலையெழுத்தே என்று ஏற்றுக்கொள்ளவா முடியும்?

சமீபகாலமாகப் பணத்துக்காக குழந்தைகளைக் கடத்தும் செயல்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது காவல்துறை செயல்படுகிறதா இல்லையா என்கிற சந்தேகம் ஏற்படாமல் இல்லை. சில தினங்களுக்கு முன்பு கோவையில் ஒரு தொழிலதிபரின் இரு குழந்தைகளைக் கடத்திச் சென்று அந்த ஓட்டுநர், ஆற்றில் தள்ளிக் கொலை செய்திருக்கிறார். சிறுமியின் சடலம் கிடைத்து அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்துக்குத் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தாலே மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பது புரிந்தது.

சிறுமியுடைய தம்பியின் சடலமும் மறுநாள் மீட்கப்பட்டது. போலீஸ் தன்னைப் பிடித்துவிடும் என்று பயந்து கொலை செய்ததாக ஓட்டுநர் கூறியுள்ளார். அவர் மட்டும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்து, குழந்தைகளை ஒப்படைத்திருந்தால், அதிகபட்சம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்திருக்கும். குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பர். சரண் அடைந்த ஓட்டுநரை, பெற்றோரே கூட வழக்கில் தீவிரம் காட்டாமல் மன்னித்திருக்கக் கூடும். அதன்மூலம் அந்த ஓட்டுநரின் குடும்பமும் தலைகுனிந்து வாழும் அவலநிலை ஏற்பட்டிருக்காது.

சென்னை முகப்பேரில் தனியார் பள்ளியில், 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் திங்கள்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளார். சிறுவனின் தந்தை கிரானைட் தொழில் செய்கிறார். இதுவும் பணத்துக்காக நடத்தப்பட்ட கடத்தல்தான் என்று தெரிகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் குழந்தைகள் இருவர் ஒரு வார இடைவெளியில் கடத்தப்பட்டனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த வேகம் மற்றவர் விஷயங்களில் இல்லாமல் போவது ஏன் என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.

சொத்துகளைப் பறிப்பதற்காக அரசியல்வாதிகளும், ரவுடிகளும் இதுபோல ஆள்கடத்தலைத் தொடங்கி வைத்தார்கள். அவ்வாறு புகாரில் சிக்கி கைதானவர்கள் மீதான வழக்குகள் இன்னும் முடியவில்லை. குற்றவாளிகளின் அரசியல் பின்புலம் காரணமாக, இதுபோன்ற ஆள்கடத்தலில் ஈடுபடுவோரை ஒடுக்க காவல் துறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லையோ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவை போலீஸ் வழக்குப் பட்டியலில் வந்திருப்பவை. வழக்கிற்கு வராமல் சம்பந்தப்பட்டவர்களே பைசல் செய்து கொண்டவை இரண்டு, மூன்று மடங்கு அதிகம் இருக்கலாம் என்று காவல் துறையினரே ஒப்புக் கொள்கின்றனர்.

மணல் கடத்தல், அரிசி கடத்தல், கிரானைட் கற்கள் கடத்தல் இவையெல்லாம் போதாதென்று, கந்துவட்டிக் கும்பலும், கட்டைப் பஞ்சாயத்து கோஷ்டிகளும், கேள்வி கேட்க யாருமில்லாமல் வளைய வருவதுதான், அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தின் இன்றைய நிலைமை. இந்த மாஃபியாக்கள் அனைத்துமே ஏதாவது அரசியல் பின்புலத்தில்தான் இயங்குகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.

அரசியல்வாதிகளுடன் சமூகவிரோதிகள் கைகோத்துச் செயல்படுவது தடுக்கப்படாவிட்டால், இங்கே தீவிரவாதம் தலைதூக்காமல் போனாலும், திரைப்படங்களில் காட்டுவதுபோல வெட்டரிவாளும், வீச்சரிவாளும், ஆசிட் பல்புகளும், நாட்டு வெடி குண்டுகளும் கோலோச்சத் தொடங்கும்.

இரு தினங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூரில் ஒரு பெண்ணை அடித்து, கையைப் பிடித்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற இளைஞர்கள் பற்றி போலீஸில் புகார் தரப்பட்டது. மோட்டார் சைக்கிளின் எண் தவறாக உள்ளது என்று கூறி அவர்களை இன்னும் போலீஸôரால் பிடிக்க முடியவில்லை. அந்த இளைஞர்கள் யாருக்குச் சொந்தமோ? யாருக்கு நெருக்கமோ? நமக்கென்ன தெரியும்?

அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலர் ஒருவரின் மகன் கடந்த மாதம் மாநகரப் போக்குவரத்து ஓட்டுநரை அடித்தாரே, கவுன்சிலர் மீது கட்சி என்னதான் நடவடிக்கை எடுத்தது? வாரிசுகளின் கொட்டத்தை அடக்கக் கட்சித் தலைமை ஏன் தயங்குகிறது?

முந்தைய ஆட்சியில் நடக்கவில்லையா என்று கேட்பதோ, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இது குறைவுதான் என்று கூறுவதோ இதற்குச் சமாதானம் ஆகிவிடாது. முந்தைய ஆட்சியில் தவறுகள் நடந்ததால்தானே அந்த ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அங்கே நடக்கவில்லையா? இங்கே நடக்கவில்லையா? என்று புள்ளிவிவரங்களை அடுக்கி வாய்ப்பந்தல் போடுவதன்மூலம் பிரச்னையைத் திசைதிருப்பாமல், சீர்கெட்டுக்கிடக்கும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையை சீர்திருத்தாவிட்டால், இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவதற்கு வேறு காரணம் எதுவுமே தேவையில்லை. அரிசி கொடுத்தது, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தது, காப்பீட்டுத்திட்டம், கான்கிரீட் வீட்டுத் திட்டமெல்லாம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத அரசுக்குத் தேர்தலில் கை கொடுக்காது என்பதுதான் கடந்த காலம் உணர்த்தும் உண்மை!

நன்றி-தினமணி.

Friday, October 29, 2010

உல்லாசமாக வாழ ஒரே வழி..?

ஒரே நாளில் கோடிஸ்வரர் ஆகா வேண்டுமா என்று வடிவேல் நோட்டீஸ் அடித்து ஒட்டிய நகைச்சுவை காட்சியை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம்.இப்போதெல்லாம் ரயில் ,பேருந்து என்று எதில் ஏறினாலும் மாதம் 25000 வருமானம்...வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் ஞாயிற்று கிழமை ஒரு நாள் வேலை செய்தல் போதும் மாதம் 15000 என்றெல்லாம் நோடிசுகள் தென்பட்ட வண்ணம் உள்ளன..இவை மனிதனின் பணத்தாசையையும்,வறுமையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சிலர் செய்யும் நாசூக்கான வேலைகள்.

சென்னையின் வர்த்தக நகரான தியாகராய நகரின் தெருக்களில் தன் அன்றாட பிழைப்புக்காக மனிதர்கள் தன் உயிர் நரம்புகள் துளைக்க எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை அங்காடித் தெருவின் வாயிலாகக் கண்டு மனம் நோகாதவர்கள் எவரும் இலர்.உணவு,உடை,இருப்பிடம் என்று இருந்த அடிப்படை தேவைகள் இப்போது உணவு,உடை,இருப்பிடம்,பணம் என நான்காக நீண்டுள்ளது இந்த நூற்றாண்டில்.இந்த பணத்தை சம்பாதிக்க தான் சராசரி மனிதனுக்கு எத்தனை ஓட்டங்களும் ,துன்பங்களும்..

ஆரம்ப காலத்தில் அடிப்படை தேவைகளின் முதல் அம்சமான உணவை பயன்படுத்தி மனிதன் பணம் சம்பாதிக்க கற்றுக் கொண்டான்.தனக்கு தெரிந்த விதவிதமான சமையல் கலைகளை பயன்படுத்தி ,அறுசுவை உணவுகளை தயார் செய்து அதன் மூலம் கடைகள்,சிறு உணவு விடுதிகள் என தொடங்கி பணம் சம்பாதித்தான்.ஆனால் இதில் அவனுடைய உடல் உழைப்பும் மூலதனமாக நின்றது.

பின்னர் காலப்போக்கில் அடிப்படை தேவைகளின் இரண்டாவது அம்சமான உடையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தொடங்கினான்.நூல் நெய்யும் கலையைக் கற்று ,சாயமிடும் முறையையும் கற்று ,தையல் கலையில் புதிய யுக்திகளையும் கையாண்டு பல விதமான ஆடைகளை நெய்து,அதன் மூலம் வர்த்தகம் செய்து பணம் சம்பாதித்தான்.இதிலும் அவனுடைய உடல் உழைப்பே மூலதனமாக பயன்பட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

காலச் சக்கரம் சுழன்றது.மக்கள் தொகை பெருகியது.தொழில் புரட்சி ஏற்பட்டது.நகரமயமாதலும் சேர்ந்தே ஏற்பட்டது.இந்த காலக் கட்டத்தில் மனித வள செறிவு ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி அதிகரிக்க ஆரம்பித்தது.அப்போதுதான் இந்த இடப் பற்றாக்குறையும் ஏற்பட்டது.தமிழகத்தில் இத்தகைய பகுதியாக மாறிப் போனது சென்னை மாநகர்.
தமிழகத்தில் பட்டி தொட்டிகலிளிருந்து,நாள்தோறும் ஒரு கூட்டம் சென்னையை நோக்கி படையெடுத்து வருகிறது.இந்த நிலையில் தான் அடிப்படை தேவைகளின் முதல் முதல் இரண்டு அம்சங்களை பயன்படுத்தி பணம் சம்பாதித்தவன் மூன்றாவது அம்சத்தை முதலாளித்துவமாக மாற்றிவிட்டான்.

சென்னையில் முக்கால் வாசி பேரின் வாழ்தளம் இப்போது வாடகை வீடுதான்,ஒரு காலத்தில் சராசரி வாடகை 500 என்று இருந்தது.அதற்கே ஓரிருவர் தான் வருவர்.ஆனால் இப்போது சராசரி வாடகை 8000,9000,10000 என நீண்டு கொண்டே போகிறது.தங்கத்தின் விலையைக் காட்டிலும் வீட்டு வாடகை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே போகிறது.இன்றைய சூழலில் 6000 சம்பளம் வாங்குபவன் கூட சென்னையில் குடித்தனம் நடத்துவது இயலாத காரியமாக ஏறக்குறைய மாறிவிட்டது.முக்கால் வாசி சம்பளம் வீட்டு வாடகைக்கே முடிந்து விடுகிறது.

இப்போது சென்னையில் உல்லாசமாக வாழ்பவர்கள் சென்னையில் நிலம் வைத்திருந்தவர்களும் ,வீடு வைத்திருந்தவர்களும் தான்.ஒரே வீட்டை நாலாகப் பிரித்து வீட்டுக்கு ஐந்தாயிரம் என வாடகையை வைத்து மாதத்துக்கு இருபதாயிரம் சரளமாக பார்க்கின்றனர்.இதில் உடல் உழைப்போ ,கஷ்டமோ எதுவுமே இடம் பெறவில்லை.உட்கார்ந்த இடத்தில் 1 ம் தேதியானால் பணம்.அதுவும் இன்றைக்கு மட்டுமல்ல.ஏழேழு தலைமுறைக்கும்.நிச்சயம் இனி வரும் காலங்களில் வாடகை கூடிக் கொண்டுதான் போகும்.இருக்கின்ற நிலங்களெல்லாம் வாடகை அபார்ட்மன்ட்களாய் மாறி வருகின்றன.இப்போதெல்லாம் tolet போர்டு வைப்பதே இல்லை.நேரடியாக வீடு கேட்டாலும் கொடுப்பதில்லை.இல்லை என கூறி விடுவது.யாரவது ஒரு இடை தரகருடன் சென்றால் மட்டுமே வீடு தருகிறார்கள்.தரகருக்கு ஒரு மாத வாடகை கமிஷன்.ரெண்டு பேருக்கு ஒரு மாதத்தில் ரெண்டு வீடு பிடித்து தந்தால் போதும் அந்து மாதத்தை அவர் ஜாலியாக கழித்து விடுவார்.

சென்னையில் உல்லாசமாக வாழ ஒரே வழி எப்பாடு பட்டாவது ஒரு வீட்டை கட்டுவதுதான்.ஒரே வீடு கட்டி விட்டால் போதும் அதற்கு பின் நாம் தான் ராஜா.இல்லேன்னா ஒரே வழி ஊருக்கு போய் விவசயாத்த பார்க்கிறதுதான்.அதுவும் இப்பலாம் முடியாம போச்சு.100 நாள் வேலை திட்டத்தால ஆள் கூலியும் ஏறி போச்சு.அப்படியே ஆள் கிடைச்சாலும் தண்ணி கிடைக்கறது இல்ல.நம்ம அரசு வாங்கி தர்றதும் இல்ல.(தண்ணி ஊத்தி தர (டாஸ்மாக்)மட்டும் ரெடியா இருக்காங்க).ஆளும் கிடைச்சு தண்ணியும் கிடைச்சா மின்சாரம் கிடையாது.இலவச மின்சாரம்னு சொல்லிட்டு பகல் முழுதும் மின்சாரத்த நிறுத்திடறாங்க.ஆள்,தண்ணி,மின்சாரம் இது மூணுமே கிடைக்கற இடத்துல நாம இருந்தா ,சிறப்பு பொருளாதார மண்டலம் வருதுன்னு நிலத்தையே புடுங்கிடறாங்க.எனவே இந்த கஷ்டம் எதுவும் இல்லாம உல்லாசமாக வாழ ஒரே வழி ..........................சென்னையில் ஒரு வீடு.

Monday, October 11, 2010

முஷாரப் தலையை வந்தால் ரூ. 100 கோடி : தலால் அக்பர் புக்திபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபின் தலையை வெட்டி கொண்டு வருவோருக்கு ரூ. 100 கோடியும், 1000 ஏக்கர் நிலமும் பரிசாக அளிக்கப்படும் என பலுசிஸ்தான் முன்னாள் தலைவர் நவாப் அக்பர் புக்தியின் மகன் அறிவித்துள்ளார். பாதுகாப்புப் படையை ஏவிவிட்டு எனது தந்தை நவாப் அக்பர் புக்தியை பர்வேஸ் முஷாரபுதான் கொன்றார். எனது தந்தையை கொன்ற அவரை சும்மாவிடமாட்டேன். அவரை தீர்த்துக்கட்டுவேன் என்று சபதம் எடுத்துள்ளார் தலால் அக்பர் புக்தி. குவெட்டாவில் சனிக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் தலால் அக்பர் புக்தி மேலும் கூறியது: முஷாரபை கொல்வதற்கு ஏராளமான நியாயமான காரணங்கள் உள்ளன. ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப், தனது அதிகார பலத்தின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை 1999-ல் தூக்கியெறிந்து ஆட்சியை கைப்பற்றினார். தனது கட்டுக்குள் பாதுகாப்புப் படை இருக்கிறது என்பதற்காக அதை ஏவிவிட்டு பலுசிஸ்தானில் தொடர்ந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தார். 2007-ல் லால் மசூதியில் பாதுகாப்புப் படையினரை நுழையவிட்டு அப்பாவிகளை சுட்டுத் தள்ளினார். இப்படி அடுக்கடுக்கான மன்னிக்க முடியாத கிரிமினல் குற்றங்களை செய்த முஷாரப் உயிருடன் வாழ்வதற்கே தகுதியற்றவர். அவரை கொன்றே தீர வேண்டும். நாட்டில் ராணுவப் புரட்சியை ஏற்படுத்தியதற்கே அவருக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த அரசு இதை செய்யத் தவறிவிட்டது. அவரை பாதுகாப்பாக தப்பிக்கவிட்டது. இதனால் அவர் லண்டனில் உலா வருகிறார். முஷாரபை இப்படியே விடக்கூடாது. அவரை தீர்த்துக்கட்டுவது அவசியம். இதனால் அவரது தலையை யார் வெட்டிக் கொண்டு வந்தாலும் அவர்களுக்கு ரூ.100 கோடி, 1000 ஏக்கர் நிலத்தை பரிசாகக் கொடுப்பதுடன் அவர்களை கெüரவிக்கவும் காத்திருக்கிறேன் என்றார் தலால் அக்பர் புக்தி.தலால் அக்பர் புக்தியின் அறிவிப்பால் முஷாரப் கொந்தளிப்பு அடைந்துள்ளார். தலால் அக்பர் புக்தி சொல்வதுபோல் அவரது தந்தையை நான் கொல்லவில்லை. பாதுகாப்புப் படை வீரர்களுடனான மோதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நவாப் அக்பர் புக்தியின் சாவுக்கும், எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றுள்ளார். தலையை எடுத்திடுவேன் என்று சொல்பவர்களைக் கண்டு அஞ்சி ஓடுபவன் நானல்ல. எத்தகைய மிரட்டலையும், சவாலையும் துணிந்து எதிர்த்து நின்று சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் நான் என்றும் முஷாரப் தெரிவித்துள்ளார்.

Saturday, October 9, 2010

தடையை நீக்க புலிகள் தான் வரவேண்டும்


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குமாறு வாதிடும் உரிமை விடுதலைப் புலிகளுக்கு மட்டுமே உண்டு எனவும் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோருக்குக் கிடையாது எனவும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது.இந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது.அதன்படி, கடந்த மே மாதம் 14 ஆம் தேதி இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த ஆணை, தீர்ப்பாயத்தில் உறுதி செய்யப்பட்ட பிறகே அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.

அதற்காக,நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் ஒருநபர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் டெல்லியில் நடந்த தீர்ப்பாயத்தின் விசாரணையில் ஆஜரான வைகோ, ‘‘விடுதலைப் புலிகள் சார்பில் ஆஜராகி கருத்துத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். அவரது வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.

இரண்டாம் கட்டமாக கடந்த 5-ம் தேதி சென்னையில் தீர்ப்பாயத்தின் விசாரணை நடைபெற்றது.தமிழர் தேசிய இயக்கம் சார்பில் அதன் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக மக்கள் உரிமைக்கழகம் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு,‘புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் விசாரணையில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று வாதாடினர்.

தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்,‘‘விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அரசே அறிவி த்துவிட்ட நிலையில் தடை எதற்கு?’’ என்று வாதிட்டார். மேலும், லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் ராபின்சன் சார்பிலும் தான் ஆஜராவதாகத் தெரிவித்தார்.

‘‘அந்த நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?’’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அதை நிராகரித்தார்.

விசாரணையின் இடையில் ஓய்வுக்காக தனது அறைக்குச் சென்றார் நீதிபதி விக்ரம்ஜித்.மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சாந்தியோக்,நெடுமாறன் மற்றும் வைகோ ஆகியோரின் வழக்கறிஞர்களைப் பார்த்து,‘‘வெயிட் ஃபார் ‘மணி’ (நேரம்)’’ என்று விரல்களைக் காண்பித்து சிரித்தார்.

மற்றொருமுறை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சட்ட நுணுக்கங்களை எடுத்துக் காட்டி ஆவேசமாக வாதிட்டுக் கொண்டிருக்கும் போது நீதிபதி, ‘‘அறையில் குளுமை போத வில்லை. ஏ.சி. அளவை மாற்றுங்கள்’‘ என்றார். அதற்கு சாந்தியோக், ‘‘ஏ.சி. அளவை மாற்றினாலும் இந்த அறையின் வெப்பம் இப்போதைக்குக் குறையாது’’என்று ராதா கிருஷ்ணனைப் பார்த்தபடி கூறினார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய ம.தி.மு.க. வழக்கறிஞர் ஒருவர், ‘‘நேரத்தை ‘மணி’ என்று குறிப்பிட்டு, புலிகளிடம் பணம் வாங்கிவிட்டு நாங்கள் பேசுவதாக மத்திய அரசு வழக்கறிஞர் எங்களைக் கிண்டல் செய்தார். அத்துடன் நமது வழக்கறிஞர்களின் வாதத்திறமையைப் பார்த்து அதிர்ந்து போனதால்தான் அறை வெப்பமாகி விட்டது என்று பொருள்பட பேசுகிறார்’’ என்று கூறினார்.

தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு எஸ்.பி. அசோக்குமார், புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான ஆதாரங்களை நீதிபதியிடம் அளித்தார். அவர் கூறும்போது, ‘‘புலிகள் மீதான தடை அமலில் உள்ள நிலையிலும், 2008 முதல் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தினர் மீதான தடையை நீட்டிப்பது குறித்த மத்திய,மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் அடங்கிய ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்ப ட்டுள்ளது’’ என்றார்.

விசாரணை தொடர்ந்து 6-ம் தேதியும் நடைபெற்றது.விசாரணையில் முதலில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் சாந்தியோக், ‘‘தடை விதிக்கப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், அவர் இயக்கம் தவிர்த்து பிற அமைப்புகள் மூலம் பல்வேறு கூட்டங்கள் நடத்தி இருக்கிறார்’’ என்று வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி விக்ரம்ஜித் சென்,‘‘புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவது தொடர்பாக புலிகள் அமைப்பைச் சேர்ந்த அதன் உறுப்பினர்கள் மட்டுமே தீர்ப்பாயத்தில் ஆஜராகி வாதிட முடியும்’’ என்று கூறி நெடுமாறன், வைகோ, தமிழக மக்கள் உரிமைக் கழகம் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

அதே நேரத்தில் ‘‘அரசுக்கு எதிராக கருத்துக் கூற உரிமை உள்ளதால் தொடர்ந்து தீர்ப்பாயத்தில் கலந்து கொண்டு அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம்’’என்றார்.தீர்ப்பாயத்தின் அடுத்த விசாரணை வரும் 20-ம் தேதி ஊட்டியில் நடைபெற உள்ளது.

தீர்ப்பாயத்தின் இந்த முடிவு ஈழ ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈழப்போராட்டத்தில் தன்னை அக்கறை உள்ளவராக காட்டிக் கொள்ளும் திரு மாவளவன் தீர்ப்பாயத்தின் முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் வராதது குறித்த அதிருப்தியையும் ஈழ ஆதரவாளர்களிடம் காண முடிந்தது.

நன்றி: குமுதம்

Sunday, October 3, 2010

சமீபத்தில் கேட்ட ஒரு ஈழத்து மாணவனின் குரல்


எம் தேசம் தமிழ் ஈழம் ஈழத்தமிழராகிய எங்களின் தாய் தேசம். தமிழர் நாம் சீரும் சிறப்போடும் வாழ்ந்த தேசம். பல கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் புலவர்கள் வாழ்ந்த மண். வீரம் செறிந்த அரசர்களான சங்கிலியன் பண்டாரவன்னியன் போன்றோர் வாழ்ந்தமன். இலங்கையின் வடக்கிலு...ம் கிழக்கிலும் தமிழ் மன்னர்கள் ஆட்சிசெய்கையில் தெற்கில் சிங்களவர்கள் குடியேறினர். பல நூறு ஆண்டுகளாய் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இறுதியாக பிரித்தானியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிரித்தானியர்கள் தங்களின் ஆட்சிமுறையை சுலபமாக்க தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வடக்கு கிழக்கையும் (தமிழீழம்) சிங்களவர்கள் வாழ்ந்த தெற்கு மேற்கையும் ஒன்றாக இணைத்து ஸ்ரீலங்கா எனப் பெயரிட்டு ஒருநாடாக ஆட்சி செய்தனர் . பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருந்தது. பிரித்தானியர் இலங்கையை விட்டு செல்கையில் சிங்களவர்களிடம் ஆட்சியை விட்டுச்சென்றனர். அன்று முதல் சிங்களவர் தமிழர் மீதான அடக்குமுறையை மெல்லமெல்ல கட்டவிழ்த்தனர். தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது அகிம்சைப்போராட்டங்கள் சிங்கள காடையர்களால்வன்முறையின்மூலம் அடக்கப்பட்டது. சிங்களவனுக்கு அகிம்சை புரியாது என்பதை சிலவருடங்களின்பின்பே தமிழர் புரிந்துகொண்டனர். அடக்குமுறையை அடக்குமுறையின்மூலமேஎதிர்கொள்ளமுடியும் என ஆயுதப்போராட்டத்தை துடிப்பும் தமிழ்ப்பற்றும் கொண்ட இளம்தலைமுறை ஆரம்பித்தது. ஆயுதப்போராட்டம் பலபோராளிகுழுக்கழாக பல்வேறு பெயர்களில் பல்வேறு கொள்கைகளுடன் இயங்கியது. பலர் பின்பு தமிழர் உரிமைக்கான தமது போராட்டக் கொள்கையில் இருந்து விடுபட்டு. தமிழ் மக்களுக்கே தீங்கிலைத்தனர், இந்தியா பல போராளிக்குழுக்களுக்கு பயிற்ச்சியளித்தது அவர்களை தமது கட்டுப்பாட்டில் தமது நலனுக்காக பயன்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவின் கபடத்தனத்தை புரிந்து அவர்களின் பிடியில் இருந்து விலகினர். இதைப் பொறுக்காத இந்தியா உளவுப்பிரிவான ரோ மற்றைய போரளிக்குளுக்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. பல போராட்டக் குழுக்கள் ஒட்டுக்குழுக்களாக மாறியது. ஸ்ரீலங்கா இனவாத சிங்களராணுவத்தையும் இரக்கமற்ற இந்தியராணுவத்தையும் துரோகிகளான ஒட்டுக்குளுக்களையும் தாண்டி. எமது விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் எமது தமிழீழ தாயகத்தின் பல பகுதியிலிருந்து சிங்களப் படைகளை விரட்டியடித்து பல நூறு ஆண்டுகளின் பின். தமிழீழ மண்ணிலே தமிழர் தம்மை தமிழரே ஆண்ட சரித்திரம் படைத்தனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்மக்கள் நின்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தனர். தமிழீழ மக்களுக்காக தமிழர் தாயகத்தில் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழீழ விவசாய பொருண்மியம், தமிழீழ மீன்வளத்துறை, சுய தொழில் ஊக்குவிப்புத்திட்டம், கால்நடை வளர்ப்புத்திட்டம் போன்றவை தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டங்களுக்கு மக்கள் முதலீடு செய்வதற்க்கு தமிழீழ மக்கள் வங்கி கடனுதவி செய்தது. மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக தமிழீழ போக்குவரத்து திணைக்களம் அமைக்கப்பட்டது. தாயகத்தில் மிகமிக குறைந்த அளவில் அரிதாக சிறு சிறு குற்ற செயல்கள் இடம்பெற்றது. அதனைத்தடுக்க தமிழீழ காவல்த்துறை நியமிக்கப்பட்டது. பிற்காலத்தில் காவல்த்துறை விரிவாக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து பிரிவு, சுங்கவியல் பிரிவு, குற்றப்பிரிவு, விசாரனைப்பிரிவுகளாக பல பரிமாற்றம் கண்டது. தமிழீழ நீதிமன்றில் சர்வதேச சட்டங்களுக்கு நிகரான சட்டங்கள் வகுக்கப்பட்டு தமிழீழத்தில் நீதி நிலைநாட்டப் பட்டது. தமிழீழ சட்டத்தை கற்ப்பிக்க தமிழீழச் சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது. இதில் பலர் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்து சட்டவல்லுனர்களாக சிறந்துவிளங்கினர் தமிழீழ மாணவர்களின் கல்விக்கு தமிழீழ கல்வித்திணைக்களம் பல உதவிகளைசெய்தது. தமிழீழத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தமிழீழ வங்கியில் கணக்கு திறக்கப்பட்டு பணம் வைப்பிலிடப்பட்டதுதமிழீழ மக்களின் வாழ்க்கை போர்ச்சூழ்நிலையிலும் நின்மதியாக இருந்தது. அவர்கள் பொழுதைக்கழிக்க பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மாவீரர்நாள், கரும்புலிகள்நாள் மக்களால் ஒற்றுமையுடனும் எழுச்சியுடனும் நினைவுகூரப்பட்டது. அத்துடன் கேணல் கிட்டு, தியாகி திலீபன், அன்னை பூரணி, இரண்டாம் லெப்டினன்ட் மாலதி போன்ற பல போராளிகளினதும் தியாகிகளினதும் நினைவுதினங்கள் மக்களால் நினைவுகூரப்பட்டது. தமிழீழ மக்கள் சுதந்திரிமாக வாழ்ந்தாலும் அவர்கள் நித்தம் எதிரியின் போரை எதிர்கொண்டனர், இருப்பினும் நின்மதியாகவே வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்தது அவர்கள் சொந்த தாய்மடியாம் தமிழீழத் தாய் நாட்டில். அவர்கள் சுதந்திரக்காற்றை சுவாசித்தனர். அவர்களை அவர்களே ஆண்டனர். அவர்களை அடக்கி ஆழ எவரும் இல்லை. தமிழர் அனைவரும் பல வருடங்களுக்குப்பிறகு தமக்கே உரித்தான வீரத்துடனும் விவேகத்துடனும் தலை நிமிர்ந்து வாழ்ந்தனர். அந்த தேசம் இன்று உலகவல்லாதிக்க நாடுகளின் துணையோடு இனவாத சிங்களத்தால் அளிக்கப்பட்டுள்ளது. தமிழர் நாம் ஒன்றாய் இணைந்து மீட்டெடுப்போம் எம் தாயகத்தை. எம் மக்கள் மீண்டும் சுதந்திரமாய் நிமிர்ந்துவாழ வழி செய்வோம். தமிழர் நாம் மீண்டும் எமக்கே உரித்தான வீரத்துடனும் விவேகத்துடனும் தலை நிமிர்ந்து வாழ, வேண்டும் எம் தமிழீழ தேசம்.

Thursday, September 30, 2010

அதிமுகவில் அஜித் ....?...ரொம்ப முக்கிய்யம்ம் ?சமிபத்தில் ஒரு பிரபலமான வார இதழில் மேற்கண்ட தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை வெளியானது.அதை பெரிய விஷயமாக்கி அட்டை படத்தில் போட்டு நல்ல லாபமும் சம்பாதித்தனர்.உண்மையிலே இது தேவையான ஒன்றா?ஒரு நடிகனை ,நடிப்புக்குரிய,கலைக்குரிய இடத்தில் மட்டுமே வைத்து பார்க்க வேண்டும்.சம்பந்தப்பட்ட நடிகர் அஜித்தே தனக்கு அரசியலில் நுழைய விருப்பமில்லை என தெளிவாக அறிவித்து விட்டார்.சும்மா இருந்தவனை நோண்டி சூப்பர் ஸ்டார் ஆக்கிட்டிங்க எனபது மாதிரி அஜித்தை அரசியல் தலையக்கி விட வேண்டாம்.அரிதாரம் பூசுபவர்கள் நாடாள நினைப்பதை என்றுமே ஊக்குவிக்க கூடாது.

ஒன்றுமே இல்லை ..அஜித் ஒரு திருமண விழாவிற்காக தன் மனைவியுடன் சென்றிருந்தார்.அப்போது அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவும் அதே திருமண விழாவுக்கு வந்திருந்தார்.அப்போது மரியாதை நிமித்தமாக மட்டுமே அஜித், ஜெயலலிதாவுடன் 10 நிமிடம் பேசி விட்டு ,காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.அதிமுக வில் காலில் விழுபவர்கள் எல்லாம் மந்திரிகள் என்பதால் அந்த பத்திரிக்கையாளர் இப்படி சிந்தித்து விட்டார் போலும்.அதே விழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டு காலில் விழுந்திருக்கிறார்.விஜய் ஏற்கனவே அரசியல் பேராசை கொஞ்சம் ஓவராக கொண்டவராகவும் ,அவரது பார்வை திமுக பக்கம் இருப்பதாலும்,இதை பெரிதாக்க வேண்டாம் என நிருபர் யோசித்திருக்கலாம்

அஜித் இன் ரசிகர்களில் ஒருவனாக இருந்து சொல்கிறேன்.அஜித் சினிமாவுக்கு தேவை.நிச்சயம் அவர் அரசியலுக்கு தகுதி வுடையவர் அல்ல.இதுவரை அவர் தமிழ் மக்களால் சம்பாதித்த பணத்தில் உல்லாசமாக இருந்ததை விட வேறென்ன பெரிதாக செய்து விட்டார்.?இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்திற்கே அவரை கட்டாயப் படுத்திதானே வரவழைக்க வேண்டி இருந்தது.கலைக்கும் சமுக பிரச்சினை களுக்கும் தொடர்பில்லை என நினைக்கும் அவர் எப்படி அரசியலுக்கு தகுந்தவராக வர முடியும்?மக்கள் பத்திரிக்கைகளை நம்புகிறார்கள்.அதை பயன்படுத்தி அவர்களுக்கு நல்வழி காட்டுங்கள்.தேவையில்லாத வதந்திகளை கிளப்பி விட்டு ஏமாற்ற நினைக்க வேண்டாம்.

மற்றொரு பக்கம் விஜய்.விஜய் அரசியலுக்கு வர்ந்துட்டாரா?யாருடன் கூட்டணி?இப்படியே போட்டு இவரும் பெரிய ஆள்தான் போலன்னு எல்லாரயும் நினனைக்க வச்சு பேப்பர் விக்கிறது.ஒரு நாள் இலங்கை தமிழருக்காக உண்ணாவிரத நடிப்பு.மறுநாள் ராகுல்காந்தியுடன் கூட்டணி பேச்சு..நாம் என்ன கண்களை மூடிக் கொண்டா வாழ்கிறோம்.விஜய்,அஜித் ,ரஜினி,விஜயகாந்த் னு எல்லாரையும் தலைவனாக்கி விட்டு உண்மைத் தொண்டை புறம் தள்ளி விட...?ஏற்கனவே அரசியல் சாக்கடையா மாறி கெடக்கு சார்?இதுல நடிகர்கள் எனும் விஷப் பூச்சிகளையும் அதில் மிதக்க விட்டு,சுத்தம் செய்பவனையும் கொல்ல நினைக்காதிங்க...!அனைத்து பத்திரிக்கையாளருக்கும் தமிழ் மக்களின் சார்பாக எனது வேண்டுகோள்..

Wednesday, September 29, 2010

வணக்கம்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்குகிறது என் வலைப்பூ பயணம் .....

எங்கே போகிறது நம் சினிமா ?

திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டை போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பியாரின் கை ஓங்க , படத்தை டூரிங் டாக்கீஸில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த நரிக்குறவர் ஒருவர் கோபத்தில் தன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து நம்பியாரைச் சுட, திரை ரெண்டாய் கிழிந்து எம்.ஜி.ஆர் இந்த பக்கமும் நம்பியார் அந்த பக்கமும் போய்விட்டார்கள்..’ என்று நகைச்சுவையுடன் எழுதுகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தனது ‘சினிமாவுக்கு போகலாம் வாங்க’ புத்தகத்தில். மிகையாகவோ நகைச்சுவைக்காகவோ சொல்லப்பட்டதாகத் தோன்றினாலும் சினிமாவின் தாக்கம் இல்லாத தமிழர்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு மிக அதிகமாய் இருக்கிறது, இன்றும். இன்று நாம் மாயஜாலுக்கோ PVR க்கோ ஜீன்ஸ், டி-ஷர்டுடன் ஸ்டைலாக சென்று பார்த்தாலும் நம் அடிப்படை ரசனை ஏறத்தாழ ஒன்றுதான். அன்று நூறு பைசாவுக்கு பார்த்தோம் இன்று நூறு ரூபாய்க்கு.

கலையின் தொழில்நுட்ப வெளிப்பாடுகளில் முக்கியமான ஒன்றான சினிமா, உலகின் எல்லா பிரதேசங்களிலும் வெவ்வேறு அளவில் தாக்கத்தை ஏற்படுத்தித்தான் இருக்கிறது. எனினும், பார்வையாளனை சம நேரத்தில் சிந்திக்க விடாமல் தன்வயமாக்கும் வலிமை உள்ள இவ்வூடகத்தை இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் எப்போதும் மற்ற எவரையும் விட மிக வித்தியாசமாகத்தான் பாவித்து வந்துள்ளார்கள். நாடகங்களின் தாக்கம் இருந்த ஆரம்பகாலம் முதல் தொழிநுட்பரீதியாக உலகின் சினிமா ஜாம்பவான்களுக்கு சவால் விடும் அளவுக்கு இங்கு வளர்ந்துள்ள இக்கலை,உண்மையில் சரியாகத்தான் கையாளப்படுகிறதா என்று பார்க்கப்போனால் ஏமாற்றம் தான் கிடைக்கிறது.

ஐம்பதாண்டுகளுக்கு முன்பே வணிகரீதியாக மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ந்துவிட்ட சினிமா, காலப்போக்கில் வெளிநாட்டுத் தாக்கங்களையும் காலமாற்றத்தின் விளைவுகளையும் உள்வாங்கி மிகப்பெரிய உருமாற்றம் கண்டிருக்கிறது. இப்போது தமிழ் சினிமா உலகம், யதார்த்தம் என்ற ஆயுதத்தை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆயுதம் என்று சொல்ல காரணம் உண்டு. நாளிதழ்களைப் புரட்டினால் செய்தியை விட அதிகமாய் சினிமா விளம்பரங்கள். கைலி கட்டிய பரட்டைத்தலை கதாநாயகன் கையில் அரிவாளுடன் ஊருக்கு வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருக்க, பள்ளிச்சீருடை அணிந்த பதின்வயது பெண்ணொருத்தி அவனைக் காதலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தமிழ் சினிமாவின் யதார்த்தம் என்பது இதுதான். இங்கு வாழ்க்கை என்பது காதலும் காதலை சார்ந்த விஷயங்களும்தான் என்றாகி விட்ட பிறகு ‘யதார்த்தம்’ என்னதான் செய்து விட முடியும்?

மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் யதார்த்த படங்கள் எப்போதோ ஆரம்பித்துவிட்டன. தாம் சார்ந்த நிலத்தை, கலாசாரத்தை , வாழ்க்கையைப் படமாக்க அவர்கள் என்றோ கற்றுக்கொண்டு விட்டார்கள். இலக்கியம், வரலாறு, பயணக்கட்டுரைகள் போன்றவை, நேரில் கண்டு அறிய முடியாத தூரப்பிரதேசங்களை பற்றிய ஒரு புரிதலை ஓரளவுக்கு வழங்கவல்லவை. அதே போல் சினிமா அல்லது எந்தக் கலையின் வடிவமும் அந்தந்த பிரதேசம், வாழ்க்கைச் சூழல், பிரத்யேக பழக்க வழக்கங்கள், சொல்லாடல்கள் போன்றவற்றை பிரதிபலிப்பது இயற்கையே. அப்படித்தான் நிகழவும் வேண்டும். அந்த வகையில் தமிழ் சினிமா தன் போலி அரிதாரங்களைக் களைந்து விட்டு நிஜத்தை நோக்கிய பயணத்தை துவங்கி விட்டது என்று சொல்லலாம், வெகு தாமதமாகவே. ஆனால் அந்த முயற்சியையும் முற்றிலும் வணிகத்தனமாக்கி, மலினமான ஸ்டீரியோடைப் திரைப்படங்களின் இன்னொரு திறப்பாக இந்த முயற்சியும் பயனற்றுப்போய்விடுமோ என்ற அச்சமும் எழுந்திருக்கிறது.

உண்மையில் தமிழ்சினிமாவில் நல்ல திரைப்படங்களுக்கான முயற்சி முப்பதாண்டுகளுக்கு முன்பே துளிர்விடத் தொடங்கியது. ஸ்டுடியோவுக்குள் பக்கம் பக்கமாக நாடக வசனங்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில், பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ அதுவரை பார்த்திருந்திராத கிராம வாழ்க்கையைத் திரை உலகுக்கு வழங்கியது. அது ஒரு தொடக்கம் என்றால் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ அதன் இன்னொரு பரிமாணத்தைத் தந்தது எனலாம். முற்றிலும் இயல்பு வாழ்க்கை இல்லைதான் என்றாலும் உரையாடல்களிலும் காட்சி அமைப்புகளிலும் இயல்பின் நம்பகத் தன்மையோடு அவை எடுக்கப்பட்டிருந்தன. அந்த நூலிழையைப் பிடித்து மேலேறிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’ போன்ற சில படங்கள் வெற்றி கண்டன. பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்றோர் தங்களால் முடிந்த அளவுக்கு இப்படியான சினிமாவை முன்னெடுத்து செல்ல ஆரம்பித்தனர். ஆனால் இந்த கிராமியப் படங்களின் வெற்றிகளை சாதகமாக்கிக் கொண்டு ஏ.வி.எம் போன்ற பெரிய நிறுவனங்கள் முற்றிலும் வணிக நோக்கில் பல மசாலா சினிமாக்களைத் தயாரித்து நம்மைத் துன்பப்படுத்தின. வெளிப்புறப்படப்பிடிப்பு, இயல்பான வசனங்கள் என்று நம் சினிமா முன்வைத்திருந்த காலடி ‘சகலகலா வல்லவன்’ , ‘ முரட்டுக்காளை’ என்று திசை மாறியது. பிறகு வரிசையாக வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் சம்பந்த இல்லாத படங்கள், சிறுபிள்ளைகளின் நாடக முயற்சிக்கு இணையான ‘ காவியங்கள்’ ரசிகர்களின் ரசனையை வேறுபக்கம் திருப்பி விட்டன. நல்ல சினிமாவைத் தர இயக்குனர்கள் பயந்தார்கள் என்றே சொல்லலாம். ‘திரையில் ரெண்டு நிமிஷம் சத்தமில்லாமல் மௌனமான காட்சி வந்தால் தமிழ் ரசிகன் பொறுக்கமாட்டான்’ என்று ஒரு இயக்குனர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

மலையாளத்தில் பல யதார்த்த படங்கள் நம்மூர் வணிகப்படங்கள் போல் ஓடியிருக்கின்றன. நாம்தான் இது கலைப்படம் - இது வணிகப்படம் என்று பிரித்துப்பார்த்துப் பழகி இருக்கிறோம். நம்மூரின் யதார்த்தப் பட முயற்சிகள் தூர்தர்ஷனில் ஞாயிறு மதிய ஒளிபரப்பில் ‘வெளியாகி’ மறைந்தே விட்டன. இந்தியத் திரைப்படங்களை உலக அரங்கில் கொண்டு சென்ற சத்யஜித்ரே, ரித்விக் கட்டக் முதல் நமக்கு வெகு அண்மையில் உள்ள கேரளாவின் அடூர் கோபாலகிருஷ்ணன் வரை பலர் எத்தனையோ யதார்த்த படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

தமிழில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக உண்மையான கிராமத்து மனிதர்கள், இடங்கள், பள்ளிக்கூடங்கள் என்று ஒரு அருமையான அனுபவமாக தங்கர்பச்சானின் அழகி அமைந்தது. அதுதான் தொடக்கம். தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த சேரனின் ஆட்டோகிராப் இளம்பிராயத்து காதல்களையும் வாழ்க்கையில் ஒருவன் எதிர்கொள்ளும் இடர்களையும் சற்று இயல்பாக சொன்னது. பள்ளிக்கூட குறும்புகள், பதின்வயது காதல் என்று பலரைத் தன் இளமைக்காலத்தை நினைத்து ஏங்கும்படி செய்ததில் சேரனுக்கு வெற்றிதான். இது போன்ற படங்களின் வெற்றி, சிகப்பான முகங்களைப் பார்த்து பழகிய தமிழ் மக்களுக்கு தலையில் எண்ணெய் வழியும் கிராமத்து முகங்களை திரையில் அசலாக காட்டியது. மக்கள் தங்களைத் தாமே திரையில் பார்த்து மகிழ்ந்தார்கள். சினிமாவின் கதை சொல்லும் போக்கில் ஓர் திடீர் மாறுதல். களம் நேரடியான கிராமம். துணை நடிகர்களாக அந்தந்த வட்டாரத்தை சேர்ந்தவர்களே நடித்தால் நம்பகத்தன்மை கூடியது.மிக முக்கியமாக தமிழ் சினிமா மேதைகள் என்று போற்றப்படும் பாலசந்தர், மணிரத்னம் போன்றோர் செய்ய துணியாத ஒரு விஷயத்தை இவ்வியக்குனர்கள் தைரியமாக செய்தார்கள். நம் முன்னோடி இயக்குநர்கள் புவியியலை என்றுமே பொருட்படுத்தியது கிடையாது. பாலச்சந்தரின் படங்கள் பலவற்றில் திரைக்கதையினூடே திடீரென்று மலைகள் முளைக்கும். ஆங்காங்கே அருவிகள் வழியும். அது இந்தியாவின் எந்த பிரதேசமானாலும் சரி. பாடல் காட்சிகளில் கடல் அலை பொங்கி பிரவாகமெடுக்கும். மணிரத்னம் போல் புவியியல் நிபுணர் யாருமில்லை எனலாம். அவரைப் பொருத்தவரை சிறுநகரம், கிராமம் எல்லாம் திருநெல்வேலியுடனேயே முடிவடைகின்றன. மதுரையைத் தாண்டினால் மத்திய ஆப்ரிக்கா வந்து விடுவதால் அவர் அங்கெல்லாம் செல்வதில்லை. காட்டுக்குள் நடக்கும் கதை என்றால் இந்தியாவின் எந்த காட்டிற்கும் சென்று வந்து விடுவார். நமக்கு விஷுவல் தானே முக்கியம். கதையுடன் தொடர்புடைய நிலமாவது மண்ணாவது. இல்லை என்றால் குரு (பாய்) தன குஜராத்தி மனைவியுடன் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் ‘தேரே பினா’ என்று பாடுவாரா? ஏமாற்றம் தரும் விதமாக உண்மையிலேயே முக்கியத்துவம் தரப்பட வேண்டிய இயக்குனரான மகேந்திரனின் ஜானியில் ஒரு மிகப்பெரும் அபத்தம் இருக்கும். ஊரை (சென்னை) விட்டு தள்ளி இருப்பவர் என்று அந்த கால நிரந்தர போலீஸ் அதிகாரி பாலாஜி சொல்லும் வித்யாசாகர் (ரஜினி) ஊட்டியில் இருப்பார். படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். ஜானி ரஜினியின் வாழிடமும், வித்யாசாகர் ரஜினியின் வாழிடமும் முற்றிலும் வெவ்வேறாக இருப்பினும், கதைப்படி அவர்கள் ஒரே ஊர்காரர்கள். இப்படி கதை நடக்கும் களத்தை பற்றி எந்த தெளிவும் இல்லாமல் தான் படங்கள் உருவாகி வரலாறு படைத்தன.

இந்த மாபெரும் அபத்தத்தை தகர்த்தது இன்றைய இளம் இயக்குனர்களின் சாதனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவால் ஒரே ஒரு காமெடி காட்சிக்கும், சில கல்லூரி காட்சிகளுக்கும் மட்டுமே உபயோகப்பட்ட புதுக்கோட்டை பகுதியை மையமாக வைத்து மிக எளிமையாக ஆனால் சுவையாக ‘பசங்க’ என்று ஒரு படத்தை எடுக்கும் தைரியத்தை பாண்டிராஜ் பெற்றிருக்கிறார். பெரும் வெற்றி பெற்ற ‘சுப்ரமணியபுரம்’, கவனிக்கப்பட்ட ‘வெண்ணிலா கபடிக்குழு’ போன்ற படங்கள் கதைக்கு தேவையான புவியியலை படம் முழுவதும் கொண்டிருந்தன. வட்டார வழக்கின் வசனங்கள் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் தாண்டி அசலான மக்களை நேரில் பார்க்கும் உணர்வை தந்தன. ஜெயமோகன் வசனத்தில் வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு மனிதர்களின் மத்தியில் உறைந்துகிடக்கும் சொல்லப்படாத கதை ஒன்றைக் களமாகக் கொண்டது முக்கியமான காரணம். அன்றாடம் சென்று பொருட்கள் வாங்கும் கடையில் வேலை செய்யும் சிப்பந்திகளின் வாழ்வை, அதில் மறைக்கப்பட்டிருக்கும் துயரத்தை மட்டுமல்லாது, வாழ்க்கையை எந்தக் கோணத்திலும் எதிர்கொள்ளத் துணியும் மனிதனின் மன உறுதியையும் சிறப்பாகச் சொன்னது படம்.

நல்ல சினிமா ரசிகர்கள் மகிழ ஆரம்பித்த நேரத்தில் நடுவில் எங்கோ ஒரு சறுக்கல். இளையராஜா ஒரு முறை சொன்னது போல் ஏணியை பிடித்து மேலே ஏறுவதற்கு பதில் இறங்க ஆரம்பித்து விட்டது யதார்த்த சினிமா. இப்போது வரும் படங்களின் வேர்களை ஆராய்ந்தால் அங்கு அரிவாளை தூக்கியபடி நிற்பது பருத்திவீரன்தான். அதை விடவும் சுப்ரமணியபுரம் இன்னும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிந்து வெற்றியும் பெற்றுவிட சும்மா விடுவார்களா காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும் கலையில் வல்லவர்களான சினிமாக்காரர்கள்? தலைசீவாத கதாநாயகன், அவனுக்கென்று வேலை எதுவும் இருக்காது; கால் சட்டை தெரியும் அளவுக்கு உயர்த்திக்கட்டப்பட்டுள்ள கைலியும் வாயில் புகையும் பீடியும் தான் இன்றைய தமிழ் இளைஞர்களின் அடையாளம் என்று சொல்கிறது தமிழ் சினிமா. கதாநாயகிக்கு காதலிக்கவும் செத்துபோகவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் பேச தெரியக்கூடாது எனபது எழுதப்படாத விதி. ஆனால் தமிழ் கிராமத்து பெண்களே மறந்துவிட்ட தாவணியை உடலில் சுற்றிக்கொண்டு கதாநாயகன் போகும் வழியில் குறுக்கேயும் மறுக்கேயும் போய் அவனைக் கண் சிமிட்டாமல் சைட் அடிக்க தெரிந்திருக்க வேண்டும். கதாநாயகன் வாயெல்லாம் பல்லாக தலையை ஆட்டிக்கொண்டே நிற்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக வரும் தமிழ் படங்களை பார்த்திருப்பவர்கள் கவனித்திருக்கலாம். இப்படிப்பட்ட ‘யதார்த்தத்தை’த்தான் முன்வைக்கிறது இன்றைய தமிழ் சினிமா.

உண்மையான யதார்த்த படங்களை எடுக்க வேண்டும் என்று காத்திருக்கும் இயக்குனர்கள் முதலில் நிறைய படிக்கவேண்டும். இந்தியாவின் மற்ற மொழிகளில் சிறந்த இயக்குனர்கள் தங்கள் பிரதேச வாழ்க்கை சூழலை எப்படி திரைப்படமாக தந்திருக்கிறார்கள் என்று அவதானிக்க வேண்டும். நம்மிடையில் எத்தனையோ கதைகள், குளியலறை ஓரத்தில் நம் பார்வைக்கு மறைந்து ஊறும் பூரானை போல் நெளிந்து கொண்டிருக்கின்றன. பிற மொழிகளில் அந்ததந்த பிரதேசத்து இலக்கியங்களை படமாக்கி வருகின்றனர். தமிழில் வாழ்க்கையின் யதார்த்தங்களை சொல்லும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. அவற்றை படமாக்கலாம். எந்த ஒரு முயற்சியிலும் போலிகளின் தலையெடுப்பு நடப்பது இயல்பு தான். அப்படியானவர்களை அடையாளம் காட்டும் வகையில் சிறந்த படங்கள் வர வேண்டும். எல்லா மொழிகளிலும் சிறந்த படங்களை பார்க்கும் ஒரு தமிழ் ரசிகன் தன் மொழியில் உண்மையான சினிமாவை காண வேண்டும் என்று ஏங்குகிறான் . எப்போது நடக்கும் இவையெல்லாம்?

Friday, February 5, 2010

அசல் விமர்சனம்
ஒன்றரை வருடத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் தன ரசிகர்களை திருப்திபடுத்த முயன்றிருக்கிறார் அஜித் .அதில் வெற்றியும் பெற்று விட்டார்.கதையாசிரியர்,இயக்குனர்,நடிகர் என மூன்றில் ஜொலித்திருக்கிறார் அஜித்.பில்லா ஸ்டைலில் மீண்டும் ஒரு செம படம். ஒரு வரி கதை, பார்த்து பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் படத்தை கையாண்டிருக்கும் விதம் அருமை.முதல் பாதியில் அஜித் வரும் சீன்கள் சற்று குறைவாக இருந்தாலும் படம் முழுதும் அஜித் இருப்பது போலவே தோற்றம் அளிக்கிறது. பல சீன்களில் தல புகழ் பாடி அஜித் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றிருக்கிறார்கள். டோட்டோடின் பாடல் வீடியோவில் கலக்கல் . ஏ துஸ்யந்தா பாடலில் பழைய பாடல் இனிமை. நானும் உன்னைப் போலவே கோட் போடுறேன்.சன் கிளாஸ் போட்டு ஸ்டைலா நடக்குறேன்.ஆனா உனக்கு கிடைக்கிற மரியாதை எனக்கு கிடைக்க மாட்டுது என்று இளைய தளபதி விஜய்யையும் சிறிது கலாய்த்திருக்கிறார்கள் .

சண்டைக் காட்சிகளில் அப்படி ஒரு வேகம் காட்டியிருக்கிறார்கள். அனைத்து சண்டை காட்சிகளிலும் அப்ப்லாஸ் அள்ளுகிறது.பாவனா படத்திற்கு இனிமை.சமீராவும் நடிப்பில் அசத்தியுள்ளார்.வேகமாக நகரும் படத்தில் யூகி சேது சிறிது சிரிக்க வைக்கிறார்.சாதாரண கிளைமாக்ஸ் .ஆனால் இரண்டாம் பாகத்தில் அசுர வேகம். அஜித் குறைவாகே பேசுகிறார். பேசினால் வார்த்த்தைகள் அருமையாக விழுகின்றன.
அப்பா வேடத்தில் வரும் அஜித் 15 நிமிடம் மட்டுமே திரையில் தோன்றுகிறார். இவ்வளவு கெத்தான கெட் அப்பில் அழகான அஜித்தை காணவில்லையே என யோசிப்பவர்களுக்கு பாடல் காட்சிகளில் விருந்தளித்திருக்கிறார் அஜித்.வில்லன்களுக்கு பெரிய அளவில் மரியாதை இல்லை என்பது குறை.பிரபு சிறிய ரோலில் வந்து போகிறார்.படத்தில் சில குறைகள் இருந்தாலும் , ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல அஜித்-சரண் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றி படத்தை தந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் அஜித்துக்கு .மொத்தத்தில் அசல்- அனைவருக்கும் அசத்தல்.குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு கல்யாண விருந்து.

Sunday, January 3, 2010

பென்னாகரம் பாமக வேட்பாளர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன்


பென்னாகரம் சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள பாமக அந்தத் தொகுதியின் வேட்பாளராக கட்சியின் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை அறிவித்துள்ளது.

இத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பெரியண்ணனின் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது.

ஜனவரி 20ம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டாலும் பாமக எம்எல்ஏக்கள், மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பென்னாகரத்தில் தீவிரமாக தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டனர்.

இந் நிலையில் திண்டிவனத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இத் தொகுதிக்கான வேட்பாளராக தமிழ்க்குமரனை அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகனான இவர் பி.இ, எம்.பி.ஏ. படித்தவர். பென்னாகரத்தில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது மேட்டூரில் வசித்து வருகிறார். மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

1996 மற்றும் 2001 பேரவைத் தேர்தல்களில் பென்னாகரம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு ஜி.கே.மணி வெற்றி பெற்றார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டதோடு, தேர்தல் நேரங்களில் தந்தையுடன் தேர்தல் வேலைகளைச் செய்துள்ளார் தமிழ்க்குமரன்.

முன்னதாக பாமக பொதுக்குழுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ்,
திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் பார்முலா என்னவென்று உங்களுக்குத் தெரியும். பென்னாகரத்தில் பாமகவின் பார்முலாவை நீங்கள் காண்பீர்கள். இந்தத் தொகுதியில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வெற்றி பெறும் என்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், பென்னாகரம் தொகுதியில் 1991, 1996, 2001 என கடந்த 3 தேர்தல்களிலும் திமுக 3வது இடத்தை தான் பிடித்தது. எனவே பென்னாகரம் தொகுதியில் பாமகவின் வெற்றி உறுதியானது.

பென்னாகரம் இடைத் தேர்தலில் மகளிர் அணியினர் சிறப்பாக செயல்பட்டு கட்சி்க்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும். மற்ற நிர்வாகிகள் அனைவரும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கும் வரை பம்பரமாக சுழன்று வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பலர் பாமக ஒழிந்து விட்டது, இனி தலைநிமிராது என்று கூறுகிறார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதி மட்டும் அப்படி கூறவில்லை. ஏனென்றால் தேர்தலில் இதுபோன்ற பல தோல்விகளை சந்தித்தவர் அவர்.

1991ல் ஒரே ஒரு இடத்தில் திமுகவும், பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. 1997ல் அதிமுக 2 இடங்களிலும் பாமக 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது.

மேற்கண்ட தோல்விகளினால் திமுகவும், அதிமுகவும் காணாமல் போய் விட்டதா? பாமகவை ஓரம் கட்ட முடியாது என்பதை பென்னாகரம் தேர்தல் மூலமாக மற்ற கட்சிகள் புரிந்துகொள்ளும்.

கடந்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக பேசிக்கொண்டு பாமகவை தோற்கடித்தனர்.

காரல் மார்க்ஸ், அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் பாமக தோல்வி அடைந்து விட்டால் இந்த தலைவர்களின் கொள்கைகள் தோல்வி அடைந்ததாக அர்த்தம். மேலும் ஜனநாயகம், சமூக நீதி உள்பட அனைத்தும் தோற்று விட்டதாக அர்த்தம்.

பாமக சார்பில் 25 இயக்கங்களை மொழிக்காகவும், இசைக்காகவும், பண்பாட்டிற்காகவும் உருவாக்கி இருக்கிறேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். என்னுடன் பல போராட்டங்களில் சிறைவாசம் அனுபவித்தவர்களை 'ஜெயில்மேட்' என கூறுவேன்.

இந்த புத்தாண்டில் 2 காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படும். ஒன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்பட வேண்டும் என பெண்கள் மற்றும் ஆண்களும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது. மற்றொன்று சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்துவது என்று பாமக முடிவு செய்துள்ளது என்றார் ராமதாஸ்.

பென்னாகரம் தொகுதிக்கு திமுகவும் தனது வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையி்ல் முக்கிய எதிர்க் கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக ஆகியவை வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.

இந் நிலையில், பெண்ணாகரம் இடைத் தேர்தல் பணிகளை நேரில் ஆய்வு செய்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைத் தேர்தல் தேதியை மத்திய தேர்தல் கமிஷன் தான், முடிவு செய்யும் என்றார்.

இந்தத் தொகுதியில் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிற

ஊடகவியாளர்கள் கொலை;24 மணிநேரத்திற்குள் சிறையில் அடைப்பேன் - சரத் பொன்சேகா


தான் அரச தலைவராக தெரிவுசெய்யப்பட்டு 24 மணிநேரத்திற்குள் பத்திரிகையாளர்களின் கொலை விசாரணையை ஆரம்பித்து அக்கொலையை செய்தவர்களை கைது செய்வேன் என்று எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

”நான் பத்திரிகையாளர்களை கொன்றதாகவும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால் பதவியேற்ற 24 மணித்தியாலத்திற்குள் பத்திரிகையாளர்களின் கொலையாளிகளை கைது செய்து சிறையில் அடைப்பேன்” என்று நேற்று அரசாங்க ஊடகங்களுடனான சந்திப்பில் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்தோடு அரச ஊடகங்களை சுயாதீன ஊடகங்களாக செயற்படும் விதத்தில் தான் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவும் உறுதியளித்தார்.

சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்துவார் என்ற ஆளும் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்த சரத் பொன்சேகா ஆளும் கட்சிதான் 24 இராணுவ உயரதிகாரிகளுக்கு அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியின் கீழ் நான்கு மேஜர் ஜெனரல்கள் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் தனது தேர்தல் பணிகளுக்காக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் தனது அலுவலகத்தில் வேலை செய்வதை ஏற்றுக்கொண்ட ஊழலை ஒழிப்பதே தனது பிரதான பணியென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.